18 வயதில் இரண்டு முறை தற்கொலை முயற்சி செய்தேன், ஆனால்.!- KGF இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர்
கே.ஜி.எஃப். பட இயக்குநர் பிரசாந்த் நீலின் முதல் படமான உக்ரம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ரவி பஸ்ரூர். பிறகு கே.ஜி.எஃப் படங்களுக்கு இசையமைத்து இந்திய அளவில் பிரபலமானார்.
பிரபாஸின் சலார், யஷ் நடித்திருக்கும் டாக்சிக் போன்ற படங்களுக்கும் ரவி பஸ்ரூர் இசையமைத்திருக்கிறார்.
கன்னடம், தெலுங்கு தவிர்த்து மலையாளம், இந்தி படங்களுக்கும் இசையமைத்திருக்கிறார். இந்நிலையில் நிகழ்ச்சியில் ஒன்றில் ரவி பஸ்ரூர் பேசிய விஷயங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
"எனக்கு 18 வயது இருந்தபோது இரண்டு முறை தற்கொலைக்கு முயற்சி செய்திருக்கிறேன். எனக்கு வாழ பிடிக்காமல் இருந்தது. ஆனால் இரண்டு முறையுமே நான் காப்பாற்றப்பட்டேன். இரண்டாவது முறை என்னை காப்பாற்றியவர் என் இசையைக் கேட்டு ஒரு கீபோர்டு வாங்கிக் கொடுத்தார்.

மேலும் ரூ. 35 ஆயிரம் கொடுத்தார். அன்று தான் என் பெயரை ரவி என்று மாற்றிக் கொண்டேன். என்னை காப்பாற்றி உதவி செய்தவரின் பெயர் தான் ரவி" என்று பேசியிருக்கிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


