Rain Alert: உருவான காற்றழுத்தத் தாழ்வு பகுதி; எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு?

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான வளிமண்டல சுழற்சி காற்றழுத்த பகுதியாக வலுப்பெற்று தென்மேற்கு வங்கக்கடலுக்கு நகர்ந்து வருவதால், சில மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்திருக்கிறது

இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "பூமத்தியரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.

Rain Alert - மழை

இது தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்தியரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் நிலவி வருகிறது.

இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்தியரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் வலுப்பெறக்கூடும்.

இதனால் தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தேனி, திண்டுக்கல், மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும்.

Rain Alert - மழை
Rain Alert - மழை

23 முதல் 25 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.

26 மற்றும் 27 ஆம் தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும்" என்று வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.