Chiyaan Vikram: சில நேரங்களில் மௌனம்... - அடுத்தடுத்த 4 படங்கள்; அப்டேட் கொடுத்த நடிகர் விக்ரம்!

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகன் இடத்தில் ஒரு இருக்கையைப் பதிவு செய்திருப்பவர் நடிகர் சியான் விக்ரம். நடிப்புக்காக உடலை வருத்திக்கொண்டு கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுப்பதற்கு இவர் ஒரு உதாரணம் என ரசிகர்கள் இவரைக் கொண்டாடி வருகின்றனர்.

கடைசியாக இவரது நடிப்பில் வீர தீர சூரன் திரைப்படம் வெளியாகி இருந்தது. அடுத்து விக்ரம் படம் குறித்த அறிவிப்புகள் எதுவும் பெரிதாக இல்லை.

இந்த நிலையில், நடிகர் விக்ரம் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அப்டேட் ஒன்றைக் கொடுத்திருக்கிறார். அதில், ``சில நேரங்களில் மௌனம் என்பது ஒரு மிகப்பெரிய தயாரிப்புக்கான இடைவெளி. என்னை நெகிழ வைக்கும் கதைகளுக்காக இந்த ஆண்டு முழுவதும் காத்திருந்தேன்.

View this post on Instagram

A post shared by Vikram (@the_real_chiyaan)

இப்போது, நான் மிகவும் மதிக்கக்கூடிய இயக்குநர்களுடன், முற்றிலும் மாறுபட்ட நான்கு திரைப்படங்களில் பணிகளைத் தொடங்குவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இந்த நான்கு பயணங்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள நான் ஆவலாக இருக்கிறேன். அன்புடன், சீயான்" எனப் பகிர்ந்திருக்கிறார்.

ஏற்கெனவே கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான துருவ நட்சத்திரம் சில சிக்கல்களால் இன்னும் திரைக்கு வரவில்லை. இந்த ஆண்டு மே மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதைத் தொடர்ந்து, இயக்குநர் போடி ராஜ்குமார் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பதாகக் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், 4 இயக்குநர்களுடன் ஒப்பந்தமாகியிருப்பதாக நடிகர் விக்ரம் அவரின் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.