புரோக்கிங் நிறுவன பங்குகள் கடும் சரிவு: ரிசர்வ் வங்கியின் கிடுக்கிப்பிடி!

 

இந்திய பங்குச்சந்தை இன்று ஏற்றத்துடன் காணப்பட்ட போதிலும், முன்னணி பங்குச்சந்தை புரோக்கிங் நிறுவனங்களின் பங்குகள் சுமார் 10% வரை சரிவை சந்தித்துள்ளது முதலீட்டாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி பாசிட்டிவாக இருந்த சூழலில், பிஎஸ்இ , ஏஞ்சல் ஒன், எம்சிஎக்ஸ் போன்ற நிறுவனங்களின் பங்குகள் படுமோசமாக சரிந்துள்ளன. இதற்கு இந்திய ரிசர்வ் வங்கி விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகளே முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.

 

பங்குச்சந்தை புரோக்கிங் நிறுவனங்களுக்கு வங்கிகள் கடன் வழங்குவதில் இருந்த தளர்வுகளை நீக்கி, சமீபத்தில் ரிசர்வ் வங்கி கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. புரோக்கிங் நிறுவனங்கள் கடன் பெறுவதில் சிக்கல்கள் ஏற்பட்டதால், அவற்றின் செயல்பாடுகள் மற்றும் லாபம் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் முதலீட்டாளர்களிடையே எழுந்துள்ளது. 

 

இதன் விளைவாகவே இன்று வர்த்தகத்தின் போது இந்நிறுவனங்களின் பங்குகள் பெரும் வீழ்ச்சியைக் கண்டன. ரிசர்வ் வங்கியின் இந்த அதிரடி நடவடிக்கை பங்குச்சந்தை வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

 

Edited by Siva

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.