இன்று ஒரே நாளில் 15,000 ரூபாய் குறைந்த வெள்ளி விலை.. தங்கமும் குறைவு..!
சென்னை சந்தையில் கடந்த சில நாட்களாக உச்சத்தில் இருந்த தங்கம் மற்றும் வெள்ளி விலையில் அதிரடி வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இது பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை தந்துள்ளளது.
கடந்த 12-ஆம் தேதி ஒரு கிலோ வெள்ளி 3 லட்சம் ரூபாய்க்கு விற்பனையான நிலையில், நேற்று 2,80,000 ரூபாய்க்கும், இன்று மேலும் குறைந்து 2,65,000 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. நான்கே நாட்களில் வெள்ளி கிலோவுக்கு 35,000 ரூபாய் வரை குறைந்துள்ளது.
அதேபோல், தங்கத்தின் விலையும் படிப்படியாக சரிந்து வருகிறது. நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கம் 14,560 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று அது 14,400 ரூபாயாக குறைந்துள்ளது.
மேலும், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 15,753 ரூபாய் என விற்பனையாகி வருகிறது. சர்வதேசப் பொருளாதார சூழல் மற்றும் டாலரின் மதிப்பு மாற்றங்களால் இந்த சரிவு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
தங்கம் மற்றும் வெள்ளி விலை வரும் நாட்களில் இன்னும் குறைய வாய்ப்புள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளதால், நகை வாங்குவோர் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
Edited by Siva
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

