Akshay Kumar: நான் அவரை அறைந்த பிறகு என் கரியரே முடிந்துவிட்டது என நினைத்தேன் - அக்ஷய் குமார்
பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் கடைசியாக ஜாலி எல்.எல்.பி 3 படத்தில் நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து அவருடைய அடுத்த திரைப்படமான பூத் பங்களா திரைப்படமும் ரிலீஸுக்குத் தயாராகி வருகிறது.
தற்போது வீல் ஆஃப் பார்டியூன் நிகழ்ச்சி ஒன்றைத் தொகுத்து வழங்கி வருகிறார்.
அந்த நிகழ்ச்சியில் அவரிடம் அவர் வாழ்வில் நடந்த சங்கடமான தருணம் எதுவென்று கேள்வி எழுப்பப்பட்டது.
இக்கேள்விக்கு அவர் அளித்த பதில் இணையத்தில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.
கேள்விக்குப் பதிலளித்த அக்ஷய் குமார், "நான் என் நண்பருடன் ஒரு பார்ட்டிக்குச் சென்றிருந்தேன். அங்கு ஒரு நபர் என் நண்பரைத் தொடர்ந்து துன்புறுத்திக் கொண்டே இருந்தார்.
நான் அவரிடம் அமைதியாக இருங்கள் என்று மீண்டும் மீண்டும் கூறினேன். நான் ஐந்து முறை அவரை எச்சரித்த பிறகும் அவர் அதைச் செய்து கொண்டே இருந்தார். ஆனால் அவர் தொந்தரவு செய்வதை நிறுத்தவில்லை.
அவர் இப்படிச் செய்து கொண்டே இருப்பதால், என்னுடைய நண்பர் அங்கு அழத் தொடங்கிவிட்டார்.

பிறகு நான் அந்த நபரை அறைந்துவிட்டேன். அவர் மயங்கிக் கீழே விழுந்துவிட்டார். அவர் மீது தண்ணீர் தெளித்து எழுப்ப முயன்றோம். அந்தத் தருணத்தில் என்னுடைய கரியர் முடிந்துவிட்டது என்று பயமும் வந்துவிட்டது.
பிறகு, அவர் சிறிது நேரத்தில் தெளிவான நிலைக்கு வந்துவிட்டார். எனக்கு அது உண்மையிலேயே சங்கடமாக உணர வைத்தது.
முடிந்தால் அதை மாற்ற விரும்புவேன். இன்று இருந்தால் நான் அமைதியாக அங்கிருந்து நடந்து சென்றிருப்பேன்" எனக் கூறியிருக்கிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


