`பிகில் படத்தில் விஜய்யின் இந்தக் காட்சி எனக்கு மிகவும் பிடிக்கும் - சீமான்

`ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் 2025 விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற சீமானிடம் சில பிரபலங்களைத் திரையில் காட்டி, கேள்விகள் கேட்டோம்.

அந்த அனைத்துக் கேள்விகளுக்கும் அதகள பதில்களைச் சொல்லி, கலகலத்தார் சீமான். அவர் பேசிய வார்த்தைகள்...

``சிம்பு - சிலருக்கு நடிப்பு வரும்... சண்டைக்காட்சி வராது. சிலருக்கு நகைச்சுவை வராது. ஆனால், எல்லாத் திறமைகளையும்கொண்ட என் தம்பி இன்னும் அவனுக்குண்டான உச்சத்தைத் தொடவில்லை. அடுத்த படம் வரும்போது கண்டிப்பாக உச்சம் தொடுவான்.

சீமான்

பிரதீப் ரங்கநாதன் - `கோமாளி’ படம் பார்த்து வியந்துவிட்டேன். க்ளைமாக்ஸில், மழை வெள்ளத்தில் கர்ப்பிணி பெண்ணுக்கு உதவியவரின் பெயர் ஜோசப்.’

சின்ன வயதிலேயே மத நல்லிணக்கம் அவருக்கு நன்கு தெரிந்திருக்கிறது.

மாதவன் - அவருக்கு எப்போதும் தமிழில் வாழ்த்து அனுப்புவேன். முன்பெல்லாம் சிரமப்பட்டார். ஆனால், இப்போது ஏஐ-யில் என் வாழ்த்தை மாற்றி எனக்கே காட்டுகிறார்.

விஜய் - அவருடைய `மெர்சல்’ திரைப்படம் எனக்கு மிகவும் பிடிக்கும். `பிகில்’ திரைப்படத்தில் பெண்களை ஊக்கப்படுத்தி, வெளியே வா என்கிற ஒரு காட்சி வரும். எனக்கு அந்தக் காட்சி மிகவும் பிடிக்கும்.

உதயநிதி - அப்பா முதலமைச்சராக இருந்தாலும், அவர் மிகப்பெரிய பொறுப்பில் இருந்தாலும் சகஜமாகப் பழகுவார். அவரும் எனக்கு தம்பிதான்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.