``அதைப் பார்த்துட்டு அப்பா ஆனந்தக் கண்ணீர் வடித்தார்!’ - துருவ் | நம்பிக்கை விருதுகள் 2025 - Live

`` `பைசன்’ படத்துக்கு என்னோட முயற்சிகளைப் பார்த்துட்டு, அப்பா ஆனந்தக் கண்ணீர் வடித்தார்! - துருவ்

துருவ் விக்ரம் பேசுகையில், "பி.சி சார் கையால் இந்த விருதை வாங்குவது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய கௌரவம். ‘பைசன்’ படத்துக்காக நான் எடுத்த முயற்சிகளைப் பார்த்து அப்பா ஆனந்தக் கண்ணீர் வடித்தார். அப்பா எட்டு அடி பாய்ந்தால், பிள்ளை 16 அடி பாயும் என்று அவர் ட்வீட் செய்தது, எனக்குப் பெரிய மோட்டிவேஷன். அப்பாவின் கடின உழைப்பும், ஒழுக்கமும்தான் எனக்குப் பெரிய இன்ஸ்பிரேஷன். தமிழ் சினிமாவில் ஒரு நல்ல இடத்தைப் பிடிக்க இன்னும் கடுமையாக உழைப்பேன்" என்றார்.

எஸ்.வி.ஆர் குறித்து திருமா பேச்சு!

``நான் கல்லூரி மாணவனாக இருந்த காலத்திலிருந்தே தோழரின் இருத்தலியமும் மார்க்சியமும் என்கிற நூலையும், கம்யூனிச அறிக்கை என்கிற நூலையும் படித்திருக்கிறேன். அப்போது எனக்குப் பெரிய புரிதல் இல்லை என்றாலும், அது எங்களின் பார்வையை விசாலப்படுத்தியது. இன்றைக்கு நாங்கள் எந்தக் கோணத்தில் அரசியலைப் பார்க்கிறோமோ, எந்தக் களத்தில் போராடுகிறோமோ... அதற்கு எஸ்.வி.ஆர் அவர்களின் சிந்தனைகள் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின."

திருமாவளவன்

`Bro’ Volunteers குழு பேச்சு..!

``நாங்கள் வாதாடிய அனைத்து வழக்குகளுக்கும் நீதியைத் தந்தது நீதிமன்றம்தான். அதை நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு சென்ற சிறிய பணிதான் எங்களுடையது.’’

`Bro’ Volunteers குழு
`Bro’ Volunteers குழு

பொதுநலப் போராளிகள் `Bro’ Volunteers குழு

சுற்றுச்சூழல் சீரழிவு, ஸ்மார்ட் சிட்டி முறைகேடு, நீர்நிலை ஆக்கிரமிப்பு... எனப் பல பொதுநல வழக்குகளை எடுத்துப் போராடிவருபவர்கள் மதுரையைச் சேர்ந்த `Bro’ Volunteers குழு.

இந்தக் குழுவுக்கு பொதுநலப் போராளிகள் விருதை வழங்கி, சிறப்பித்தார்கள் `சிறை’ திரைப்படக் குழுவினர்.

`Bro’ Volunteers குழு
`Bro’ Volunteers குழு

ஒளிரும் நாயகன் துருவ் விக்ரம்!

2025-ம் ஆண்டு வெளியாகி, மக்கள் மனதில் இடம்பிடித்த ஒரு சில திரைப்படங்களில் முக்கியமான ஒன்று பைசன்.’ அந்தத் திரைப்படத்தின் கதாநாயகன் துருவ் விக்ரம்தான் இந்த ஆண்டு நம்பிக்கை விருதுகளின் ஒளிரும் நாயகன் விருதைப் பெற்றிருக்கிறார். இவருக்கு இந்த விருதை வழங்கி, சிறப்பித்தார் ஒளிப்பதிவாளர் பி.சி.ஶ்ரீராம்.

‘பெருந்தமிழர் விருது’ எஸ்.வி.ராஜதுரை!

நம்பிக்கை விருதுகளின் உச்ச விருது, ‘பெருந்தமிழர் விருது.’ அப்படிப்பட்ட பெருந்தமிழர் விருதை இந்த ஆண்டு பெறுகிறார் தமிழ்நாட்டில் சிவில் உரிமைகளுக்கான அடித்தளத்தை அமைத்த எஸ்.வி.ராஜதுரை.

இவருக்குப் பெருந்தமிழர் விருதை வழங்கி, சிறப்பித்தார்கள் வி.சி.க தலைவர் திருமாவளவனும் இயக்குநர் ராமும்.

பெருந்தமிழர் விருது
பெருந்தமிழர் விருது

சு.வெங்கடேசன் பேச்சு

``பத்தாண்டுக்கால போராட்டத்துக்குப் பிறகு ஆசியப் போட்டிகளில் அங்கீகரிக்கப்பட்ட கபடியில், வறுமையையும் தடைகளையும் வென்று சாதனை படைத்த அபினேஷின் தன்னம்பிக்கையைப் பாராட்டுகிறேன். அவர் விளையாட்டில் இன்னும் பல வெற்றிகளைப் பெற என் வாழ்த்துகள்.’’

சு. வெங்கடேசன்
சு. வெங்கடேசன்

தமிழகத்தின் பெருமிதம் அபினேஷ் மோகன்தாஸ்

திருவாரூர் மாவட்டத்தின் ரியல் பைசனான அபினேஷ் மோகன்தாஸுக்கு தமிழகத்தின் பெருமிதம் என்கிற நம்பிக்கை விருதை வழங்கி, சிறப்பித்தார் எம்.பி சு.வெங்கடேசன்.

 அபினேஷ் மோகன்தாஸ் - சு.வெங்கடேசன்
அபினேஷ் மோகன்தாஸ் - சு.வெங்கடேசன்

``என் வயிறு புண்ணியம் செய்யலையா?’’ - `சிங்கப்பெண்’ விருது பெற்ற கவிதா!

``என் வயிறு புண்ணியம் செய்யலையா... என்னோட ஒரு புள்ளையுமே எந்தவொரு சாதனையும் செய்யலையேனு எங்க அம்மா பேசி, கேட்டிருக்கேன். ஆனா, நான் சாதிக்கும்போது அம்மா இல்லை. இப்போ எனக்கு, `இந்தியாவின் டீம் கோச்’, `ஆசியன் கோல்டு மெடலிஸ்ட்’னு ஏகப்பட்ட சாதனைகள் சாத்தியமாகியிருக்கு.’’

கவிதா
கவிதா

சிங்கப்பெண் கவிதா!

சர்வதேசக் கபடி போட்டிகளில் தங்கப் பதக்கத்தை வென்றவர், திருமணத்துக்குப் பிறகு கொஞ்சம் சுணங்கியிருக்கிறார், கவிதா. ஆனால், அவருடைய கணவரும் மாமியாரும் கொடுத்த சப்போர்ட்டில் இப்போது கவிதா இந்திய கபடி டீமின் கோச்.

2025-ம் ஆண்டுக்கான நம்பிக்கை விருதுகளில், சிங்கப்பெண் விருதை் கவிதாவுக்கு வழங்கி, சிறப்பித்தார் பாடலாசிரியர் விவேக்.

கவிதா - விவேக்
கவிதா - விவேக்

நடிகர் சிம்பு குறித்து சீமான்!

``அவன் அடையவேண்டிய உயரம் ரொம்பப் பெருசு. அதை இவன் இன்னும் தொடலை. அந்த இடம் இன்னும் அவனுக்காகக் காத்திருக்கு. அதை சீக்கிரமே தொடுவான். ‘அரசன்’ படம் வந்தவுடன் அந்த இடத்துக்குப் போவான். எல்லா திறன்களும் ஒருங்கே அமையப்பெற்ற கலைஞன் அவன்." - நடிகர் சிம்பு குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்

`டிரெண்டிங் மாஸ்டர்’ சாண்டி

டான்ஸ் மாஸ்டர் என்பதைத் தாண்டி, ‘லியோ’, ‘லோகா சாப்டர் ஒன்’, ‘கிஷ்கிந்தாபுரி’... என வரிசையான படங்கள் மூலம் நடிகராக மக்களின் மனதில் ஸ்ட்ராங்கான இடம்பிடித்திருக்கிறார் சாண்டி மாஸ்டர்.

திரைப்படங்களில் சீரியஸ் கதாபாத்திரங்களில் நடித்தாலும், இவரது ‘கலகல’ பக்கம் `பிக் பாஸ்’ தமிழ் சீசன் 3 மூலம் நாம் அறிந்ததே.

டான்ஸ் மாஸ்டர் டு நடிகர் பாய்ச்சலை எடுத்திருக்கும் சாண்டி மாஸ்டர் 2025-ம் ஆண்டுக்கான நம்பிக்கை விருதுகளில் `டிரெண்டிங் மாஸ்டர்’ விருதைப் பெற்றிருக்கிறார்.

இவருக்கு விருதை வழங்கிச் சிறப்பித்தார் நா.த.க ஒருங்கிணைப்பாளர் சீமான்.

சாண்டி - சீமான்
சாண்டி - சீமான்

உதயநிதி குறித்து சீமான்

"அப்பா முதலமைச்சராக இருந்தாலும், அவர் மிகப்பெரிய பொறுப்பில் இருந்தாலும் சகஜமாகப் பழகுவார். அவரும் எனக்கு தம்பிதான்."

கணேசன் - சீமான்
கணேசன் - சீமான்

ஆதவ் அர்ஜுனா பேச்சு

"ஜகபர் அலி போன்ற தியாகிகளைக் காப்பாற்றத் தவறிய சிஸ்டம் மாற வேண்டும். அவர் குடும்பத்துக்கு ஒரு பங்காக 15 லட்ச ரூபாய் நிதியுதவி அளிக்கிறேன்.’’

ஆதவ் அர்ஜுன்
ஆதவ் அர்ஜுனா

அக்கறையான மீட்பன் மா.கணேசன்!

நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பு தோட்டத் தொழிலாளிகளாக கேரளாவுக்குச் சென்ற தமிழர்கள் இன்னும் அங்கேயே அதே தொழிலைத் தொடர்ந்துகொண்டிருக்கின்றனர்.

அடுத்த தலைமுறையின் விதியை மாற்ற அந்தத் தோட்டத்தில் வாழும் இளம் தலைமுறையினருக்கு எதிர்காலத்தை உருவாக்கித் தந்தவர், தந்து வருபவர் மா.கணேசன்.

இவருக்கு 2025-ம் ஆண்டின் நம்பிக்கை விருதுகளில், அக்கறையான மீட்பன் விருதை வழங்கி, சிறப்பித்தார் நா.த.க ஒருங்கிணைப்பாளர் சீமான்.

கணேசன் - சீமான்
கணேசன் - சீமான்

சாதனைத் தொழில்நுட்பன் அருண் ராஜீவ் சங்கரன்

ஒரு லட்சம் ரூபாய் முதலீட்டில் தொடங்கிய ஃபினோஸ் (FinOS) டெக்னாலஜி நிறுவனத்தை 100 கோடி ரூபாய் மதிப்புக்கு உயர்த்தியிருக்கிறார் அருண் ராஜீவ் சங்கரன்.

இவருக்கு சாதனைத் தொழில்நுட்பன் விருதை வழங்கி சிறப்பித்தார் த.வெ.க நிர்வாகி ஆதவ் அர்ஜுனா.

அருண் ராஜீவ் சங்கரன் - ஆதவ் அர்ஜுன்
அருண் ராஜீவ் சங்கரன் - ஆதவ் அர்ஜுன்

சுதா எம்.பி பேச்சு..!

"நீங்கள் ஒரு எடுத்துக்காட்டான ஒரு பெண்மணியாக இந்த உலகத்துக்குத் திகழ வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டி, கேட்டுக்கொள்கிறேன்.

​`மாதர் தம்மை இழிவுபடுத்தும் மடமையைக் கொளுத்துவோம்’ என்று முழங்கிய பாரதியின் நாட்டில் இருந்துகொண்டே பெண்களை இழிவுபடுத்தும் சமூகத்தை, ஒட்டுமொத்த இந்த ஆரோக்கியமான சமூகம் இனிமேல் போராடி எதிர்க்கும் என்று நம்புகின்றேன்.’’

தடையுடைத்த தங்கை ராஜேஸ்வரி!

இழப்பு மற்றும் வறுமைக்கு இடையே, ஆதிநிலமான கல்வராயன் மலையில் ராஜேஸ்வரி கண்ட கனவு அவரை ஐஐடி மெட்ராஸில் வந்து சேர்த்திருக்கிறது.

தமிழ்நாடு அரசின் பழங்குடியினர் பள்ளியிலிருந்து ஐஐடி-க்குள் நுழைந்திருக்கும் ராஜேஸ்வரி இன்று நம்பிக்கை விருதுகளின் தடையுடைத்த தங்கை விருதைப் பெற்றிருக்கிறார்.

இந்த விருதை வழங்கி, சிறப்பித்தார் சுதா எம்.பி.

சகாயம் ஐ.ஏ.எஸ்

ஒரு பொறுப்பற்ற சமூகத்தில் தனிமனிதனாகப் போராடி உயிர் நீத்த இவரை நான் மாமனிதர் என்பேன்." - சகாயம் ஐ.ஏ.எஸ்

ஜகபர் அலி குடும்பம் - சகாயம் ஐ.ஏ.எஸ்
ஜகபர் அலி குடும்பம் - சகாயம் ஐ.ஏ.எஸ்

ஜகபர் அலி மனைவி பேச்சு

நீங்க போனா ஆபத்து என்று நான் தடுத்தபோது, இப்படித் திருட்டு நடந்தால் நாளைக்கு நம் பிள்ளைங்க எங்கே வாழும்? என்று கேட்டுவிட்டுப் போவார் அவர்.

ஜகபர் அலி குடும்பம் - சகாயம் ஐ.ஏ.எஸ்
ஜகபர் அலி குடும்பம் - சகாயம் ஐ.ஏ.எஸ்

``மண்ணுக்காக உயிர் துறந்த மாமனிதர் ஜகபர் அலி!’’

ஜகபர் அலி குடும்பம்
ஜகபர் அலி குடும்பம்

புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தைச் சேர்ந்த ஜகபர் அலி. தனது பகுதியில் சட்டவிரோதமாக மலைகளைச் சிதைத்த குவாரி மாஃபியாக்களுக்கு எதிராகத் துணிச்சலுடன் போராடியவர். இயற்கை வளங்களைக் காக்கப் போராடிய இவரை 2025, ஜனவரி 17 அன்று மணல் மாஃபியாக்கள் கொடூரமாகக் கொலைசெய்தனர். 15 ஆண்டுக்கால சமூகப் போராட்டத்துக்குப் பிறகு தன் இன்னுயிரையே ஈந்த இந்த வீரத்தியாகியின் நினைவாக, ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் 2025-ன் `டாப் 10 மனிதர்’ பிரிவில், `உயிர் கொடுத்து மலை காத்தவர்’ விருது வழங்கப்பட்டது.

வியக்கவைக்கும் வேகப்பந்தாளன் - இளம் கிரிக்கெட் வீரர் இசக்கிமுத்துவுக்கு விருது வழங்கிய விஜய் சங்கர்

எட்டு போட்டிகளில் 14 விக்கெட்டுகளை எடுத்தவர் திருநெல்வேலியைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் இசக்கிமுத்து.

இவருக்கு வியக்கவைக்கும் வேகப்பந்தாளன் விருதை வழங்கிச் சிறப்பித்தார் கிரிக்கெட் வீரர் விஜய் சங்கர்.

இசக்கிமுத்து - விஜய் சங்கர்
இசக்கிமுத்து - விஜய் சங்கர்

உயிர் கொடுத்து மலை காத்தவர் விருது பெற்றார் ஜகபர் அலி!

மணல் கொள்ளைக்கு எதிராகப் போராடி, மணல் மாஃபியாக்களால் கொல்லப்பட்டவர் ஜகபர் அலி. அவருக்கு உயிர் கொடுத்து மலை காத்தவர் விருதை `2025-ம் ஆண்டுக்கான நம்பிக்கை விருதுகளில் வழங்கியது ஆனந்த விகடன்.

இந்த விருதை ஜகபர் அலி சார்பாக அவருடைய குடும்பத்தினர் பெற்றுக்கொண்டனர். இந்த விருதை வழங்கிச் சிறப்பித்தார் சகாயம் ஐ.ஏ.எஸ்.

ஜகபர் அலி குடும்பம்
ஜகபர் அலி குடும்பம்

``என் 60 வயசு 60 வயசு வரை தூய்மைப் பணியாளர் பணியில இருப்பேன்!’’ - ரேணுகா தேவி

ஆனந்தம் யூத் பவுண்டேஷன் மூலம் படித்தவர் `எடிட்டோரியம் நிறுவனத்தின் நிறுவனர் நிஷாந்தன். அவருடைய தாய் ரேணுகா தேவி தூய்மைப் பணியாளராகப் பணியாற்றிவருகிறார்.

ரேணுகா தேவி பேசியபோது, "என் பையன் நல்ல நிலைமைக்கு வந்த பிறகு, வேலையை விடச் சொன்னான். கஷ்ட நேரத்துல சோறு போட்டது இந்தத் தொழில்தான். 60 வயசு வரைக்கும் இந்த வேலையிலதான் இருப்பேன்னு சொல்லிட்டேன். எட்டாம் வகுப்பு படிச்ச என்னோட கஷ்டத்தைப் பார்த்துட்டு, என் புள்ளை இன்னைக்கு ஒரு கம்பெனிக்கு ஓனராகி நிக்கிறது எனக்குப் பெருமையா இருக்கு" என்றார்.

ஆனந்தம் யூத் பவுண்டேஷன்
ஆனந்தம் யூத் பவுண்டேஷன்

அமைச்சர் சிவசங்கர் பேச்சு

"இன்று சமூக ஊடகத்தின் சக்தி மிகப்பெரிய சக்தி. ஒருவரை ஓவர்நைட்டில் உச்சாணிக் கொம்பிலும் ஏற்றும்... அதேசமயம், கீழேயும் தள்ளிவிடும். நம்மிடம் இருக்கும் இந்த ஆயுதத்தை நல்ல விஷயங்களுக்குப் பயன்படுத்தினால் பெரிய மாற்றங்களை உருவாக்கலாம்.’’

ஆனந்தம் யூத் ஃபவுண்டேஷன் மூலம் படித்தவர் எடிட்டோரியம் நிறுவனத்தின் நிறுவனர் நிஷாந்தன். அவருடைய தாய் ரேணுகா தேவி தூய்மைப் பணியாளராகப் பணியாற்றிவருகிறார்.

அமைச்சர் சிவசங்கர்
அமைச்சர் சிவசங்கர்

`வழிகாட்டும் ஒளி விருது பெற்றது, ஆனந்தம் யூத் ஃபவுண்டேஷன்!

1,000-க்கும் மேற்பட்ட மாணவர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றிவருகிறது, ஆனந்தம் யூத் ஃபவுண்டேஷன்.’

இந்த ஃபவுண்டேஷனுக்கு வழிகாட்டும் ஒளி விருதை வழங்கிச் சிறப்பித்தார் தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரன்.

ஆனந்தம் யூத் பவுண்டேஷன்
ஆனந்தம் யூத் ஃபவுண்டேஷன்

``அரசியலில் எனக்குப் பிடித்த நபர், ஜெயலலிதா அம்மா!’’ - நடிகை கௌதமி

நடிகை கௌதமி சின்னச் சின்ன கேள்விகளுக்கு பதிலளித்தார். `சமீபத்தில் பார்த்ததில் பிடித்த திரைப்படம்?’ `` துரந்தர்.’ பிடித்த நடிகர், `சிறை’ படத்தில் நடித்த இளம் நடிகர், அக்‌ஷய் குமார்.’

`அரசியலில் எப்போதுமே பிடித்த நபர்..?’ ``அசைக்க முடியாத நம்பிக்கை, ஜெயலலிதா அம்மா!"

கௌதமி
கௌதமி

மானுட நேசகி அலமேலு மங்கையற்கரசி

உடல்நிலை சரியில்லை என்று வரும் மக்களுக்கு இன்முகத்தோடு நம்பிக்கையை ஊட்டுபவர் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் அலமேலு மங்கையற்கரசி.

இவருக்கு 2025-ம் ஆண்டுக்கான நம்பிக்கை விருதுகளில், மானுட நேசகி விருதை வழங்கிச் சிறப்பித்தார் நடிகையும் அரசியல்வ

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.