தவெக நிகழ்ச்சியில் இளைஞர் உயிரிழப்பு!! சேலத்தில் பரபரப்பு!!

சேலத்தில் தவெக தலைவர் விஜய் பங்கேற்ற நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் 20 வருடங்களாக சேலத்தில் வசித்த 37 வயதுடைய வடமாநில இளைஞர் சுராஜ்  மயங்கி விழுந்து உயிரிழந்தார். அடையாள அட்டை இல்லாததால் நிகழ்ச்சி மைதானத்துக்குள் அனுமதிக்கப்படாத சுராஜ், வெயிலில் நீண்ட நேரம் காத்திருந்ததால் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது.


இவர் வெள்ளி கொலுசு தயாரிப்பு மற்றும் கட்டிட வேலை போன்றவற்றை செய்து குடும்பத்தை நடத்தி வந்துள்ளார். இச்சம்பவத்தை தொடர்ந்து மருத்துவமனையில் சுராஜ் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர்.


இந்த சம்பவம் குறித்து அன்னதானப்பட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுராஜ் கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.