இன்று ஒரே நாளில் 20,000 ரூபாய் குறைந்த வெள்ளி விலை.. முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி..

வெள்ளி விலை கடந்த சில நாட்களாக மிகப்பெரிய ஏற்ற இறக்கத்தில் இருந்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் 20 ஆயிரம் ரூபாய் குறைந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

நேற்று மூன்று லட்ச ரூபாய் ஒரு கிலோ வெள்ளி விற்பனையான நிலையில் இன்று இரண்டு லட்சத்து 80 ஆயிரம் எனவும், ஒரு கிராம் 280 ரூபாயும் விற்பனையாகி வருகிறது.

 

அதே போல் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 1600 ரூபாய் இன்று குறைந்துள்ளது. இன்று ஒரு சவரன் சென்னையில் ஒரு லட்சத்தை 15 ஆயிரத்து 200 என விற்பனையாகி வருகிறது. ஒரு கிராம் தங்கம் விலை 14, தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ச்சியாக சரிந்து வருவது பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும் முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Edited by Siva

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.