மும்பை மாநகராட்சி மேயர் பதவியில் பாஜக!! ரிது தாவ்டே பதவியேற்பு!!

மும்பை மாநகராட்சி மேயராக பாஜகவின் ரிது தாவ்டே மற்றும் துணை மேயராக சிவசேனா கட்சியைச் சேர்ந்த சஞ்சய் சங்கர் காதி ஆகியோர் பதவியேற்றுள்ளார்.


பிஎம்சி தேர்தலில் பாஜக 89 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. அதன் கூட்டணிக் கட்சியான சிவசேனா 29 இடங்களில் வெற்றி பெற்றது. பின் மேயரை தேர்ந்தெடுக்க 114 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், பாஜக கூட்டணி மொத்தம் 118 இடங்களில் வென்றது.


44 ஆண்டுகளுக்குப் பிறகு  மும்பை மாநகராட்சி மேயர் பதவியை பாஜக கைப்பற்றியத்தோடு மும்பையின் 2-வது பாஜக மேயர் என்ற பெருமை ரிது தாவ்டேவுக்கு கிடைத்துள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.