40 வயதுக்கு மேல் சோர்வு வர இதுதான் காரணம்!.. ஆய்வில் முக்கிய தகவல்!...


ஆண்கள், பெண்கள் என இரு பாலருக்குமே 40 வயதுக்கு மேல் உடலில் ஒரு விதமான சோர்வு வந்துவிடும். உடல் ஆக்டிவாகவே இருக்காது. எப்போதும் உடல் மந்தமாகவே இருக்கும்.. சுறுசுறுப்பாக எந்த வேலையும் செய்ய முடியாது. 60 வயது ஆகிவிட்டது போல மனம் சோர்வு பெறும்.

இந்நிலையில்தான் 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் அடிக்கடி உடல் சோர்வை உணர்வதற்கு முதுமை ஒரு காரணமாக இருந்தாலும் வாழ்வியல் அழுத்தங்களும் முக்கிய காரணம் என சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்திருக்கிறது..

குடும்பம் மற்றும் வேலை என வாழ்வின் அதிகப்படியான பொறுப்புகள் 40 வயதில் ஏற்படுவதால் மூளை அதிக ஆற்றலை உட்கொள்வதாக லண்டனின் பிரிஸ்டல் பல்கலைக்கழகம் விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள்..

நுணுக்கமான உயிரியல் மாற்றங்களும் சோர்வுக்கு ஒரு காரணமாக இருந்தாலும், 30 வயது முதலே உடல் தசைவுகளின் அளவு குறைய தொடங்குவதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். பெண்களின் ஹார்மோன் மாற்றங்களும், ஆண்களின் மன அழுத்தமும் இந்த சோர்வை இரட்டிப்பாக மாற்றுகிறது எனவும் அவர்கள் கூறுகிறார்கள்..

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.