மௌனம் பேசியதே: என்னோட ஹீரோ சூர்யா சார் கூட நடிச்சது சந்தோஷமா இருந்துச்சு - நடிகை லைலா
இயக்குநர் அமீர் இயக்கத்தில் நடிகர் சூர்யா, த்ரிஷா, லைலா நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற படம் மௌனம் பேசியதே.
காதலர் தினத்தை முன்னிட்டு இப்படம் வரும் பிப். 13 ஆம் தேதி ரீ- ரிலீஸ் ஆகிறது.
சில தினங்களுக்கு முன்பு மௌனம் பேசியதே ரீ-ரிலிஸ் குறித்து சூர்யா வீடியோ வெளியிட்டிருந்தார்.
தற்போது லைலா வீடியோ வெளியிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில், " 23 வருடங்களுக்கு முன்னாடி மௌனம் பேசியதே படத்தில் நடிப்பதற்காக இயக்குநர் அமீர் சார் என்னிடம் பேசினார்.
என்னுடைய ஹீரோ சூர்யா சார், த்ரிஷா ஆகியோருடன் நடித்தது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
23 வருடங்களுக்குப் பிறகு காதலர் தினத்தை முன்னிட்டு பிப். 13 ஆம் தேதி இந்தப் படம் ரீ- ரிலீஸ் ஆகிறது.
காதலால் நிரம்பிய படம்தான் மௌனம் பேசியதே. அதனால் இந்தச் சமயத்தில் இந்தப் படம் வெளியாவது சந்தோஷமாக இருக்கிறது.

எல்லோரும் மீண்டும் இந்தப் படத்தை தியேட்டரில் கொண்டாடப்போகிறோம். நான் உன்னை மறக்கவும் மாட்டேன், நினைக்காமல் இருக்கவும் மாட்டேன்.
பிப். 13 ஆம் தேதி என்னுடைய ஹீரோ சூர்யாவுடன் இந்தப் படத்தை தியேட்டரில் பார்க்க இருக்கிறேன்" என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


