சாம்சங் கேலக்ஸி F70e 5G இந்தியாவில் அறிமுகம்

சாம்சங் இந்தியா நிறுவனம் தனது புதிய 5G ஸ்மார்ட்போனான சாம்சங் கேலக்ஸி F70e 5G மாடலை இந்தியச் சந்தையில் இன்று அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. லெதர் பேட்டர்ன் ஃபினிஷ் மற்றும் பெரிய பேட்டரி வசதியுடன் இந்த மாடல் அறிமுகமாகியுள்ள நிலையில், பிப்ரவரி 17-ம் தேதி முதல் பிளிப்கார்ட் மற்றும் சாம்சங் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் விற்பனைக்கு வரவுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த புதிய ஸ்மார்ட்போன் 6.7 இன்ச் HD+ எல்சிடி திரையுடன் வழங்கப்படுகிறது. இதில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 800 நிட்ஸ் பிரைட்னஸ் வசதி இடம்பெற்றுள்ளது. செயல்திறன் அம்சமாக மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. 4GB மற்றும் 6GB ரேம் விருப்பங்களுடன் 128GB உள்ளமைவு சேமிப்புத் திறன் கொண்டதாக இந்த மாடல் கிடைக்கிறது.

மென்பொருள் ஆதரவாக, இந்த சாதனத்திற்கு 6 ஆண்டுகள் வரையிலான ஆண்ட்ராய்டு ஓஎஸ் மேம்படுத்தல்கள் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் வழங்கப்படும் என சாம்சங் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது. இது பட்ஜெட் விலைப் பிரிவில் நீண்டகால மென்பொருள் ஆதரவாகக் கருதப்படுகிறது.

புகைப்பட வசதிக்காக பின்புறத்தில் 50 மெகாபிக்சல் முதன்மை கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் கொண்ட இரட்டை கேமரா அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. முன்புறத்தில் 8 மெகாபிக்சல் செல்பி கேமரா இடம் பெற்றுள்ளது. நீண்ட நேரப் பயன்பாட்டிற்காக 6,000mAh திறன் கொண்ட பேட்டரி இதில் பொருத்தப்பட்டுள்ளதுடன், 25W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியையும் ஆதரிக்கிறது. தூசி மற்றும் நீர் தாக்கத்திலிருந்து பாதுகாப்புக்காக IP54 தரச்சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது. இந்த மாடலின் ஆரம்ப விலை ₹12,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக சாம்சங் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.