Mamitha Baiju: நானும் அதை அப்படித்தான் பார்க்கிறேன்! - நாளை நாளை ட்ரோல் குறித்து மமிதா பைஜூ
மமிதா பைஜூ தற்போது தமிழ் சினிமாவில் மிகவும் பிஸியாக இருக்கிறார். கடந்தாண்டு அவரது நடிப்பில் வெளியான டியூட் திரைப்படம் ப்ளாக்பஸ்டர் ஹிட்டடித்தது.
ப்ரேமலு படத்தின் வெற்றிக்குப் பிறகே தமிழில் வரிசையாகப் படங்களை கமிட் செய்தார்.
அவர் நடித்திருக்கும் ஜனநாயகன், கர, சூர்யா 46, இரண்டு வானம் ஆகிய திரைப்படங்களும் ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன.
இவற்றைத் தாண்டி, மலையாளத்தில் ப்ரேமலு பட இயக்குநர் கிரீஷ் ஏ.டி. நிவின் பாலியை வைத்து இயக்கும் பெத்தல்கம் குடும்ப யூனிட் படத்திலும் மமிதா பைஜூ நடித்து வருகிறார்.
கடந்த டிசம்பர் மாதம் ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக மலேசியாவில் நடைபெற்றிருந்தது பலருக்கும் நினைவிருக்கலாம்.
அந்த நிகழ்வில் மமிதா பைஜூ, விஜய்யின் எல்லா புகழும் பாடலின் ஓரிரு வரிகளை மேடையில் பாடியிருந்தார். அந்தக் காணொளி இணையத்தில் வைரலாகி, ட்ரோல் செய்யப்பட்டது.
சமீபத்தில், அனஸ்வரா ராஜன், அபிஷன் ஜீவிந்த் நடித்திருக்கும் வித் லவ் படத்தைப் பார்ப்பதற்கு வந்த மமிதா பைஜூவிடம் பத்திரிகையாளர்கள் சிலர் கேள்வி எழுப்பினர்.
அதில் இந்த ட்ரோல்கள் குறித்தும் கேட்டனர். அதற்கு பதிலளித்த மமிதா பைஜூ, "மக்கள் இதை வெறும் பொழுதுபோக்காகவே பார்க்கிறார்கள். நானும் அதை அப்படித்தான் பார்க்கிறேன். அது நல்ல ஃபன்!" என்று கூறியிருக்கிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


