பொதுத்துறை நிறுவனங்களால் அதிக நஷ்டமடைவதில் தமிழகம் 3-ஆம் இடம்; நிதிக்குழு சொல்லும் காரணம் என்ன?

இந்தியாவிலேயே பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் அதிக நஷ்டத்தைச் சந்திக்கும் மூன்றாவது மாநிலம் தமிழ்நாடு - இப்படி 2022-23 நிதியாண்டிற்கான அறிக்கையை வெளியிட்டுள்ளது 16-வது நிதிக்குழு.

முதல் இரண்டு மாநிலங்கள் என்ன?

16-வது நிதிக்குழு அறிக்கையின் தொகுதி 1-ன் படி, 2022-23 நிதியாண்டில்...

உத்தரப்பிரதேசம் ரூ.32,430 கோடி நஷ்டத்தையும்,

ராஜஸ்தான் ரூ.18,814 கோடி நஷ்டத்தையும்,

தமிழ்நாடு ரூ. 16,048 கோடி நஷ்டத்தையும் சந்தித்துள்ளன.

இந்த மூன்று மாநிலங்களும் வடகிழக்கு மற்றும் மலைப்பாங்கான பகுதி அல்லாத மாநிலங்களில் (Non- NEH States) சேர்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

TANGEDCO

ஏன் இந்த நஷ்டம்?

பிற Non- NEH மாநிலங்களைப் போலவே, இந்த மாநிலங்களுக்கும் நஷ்டம் ஏற்படுவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது மின்சாரத் துறை.

2022-23 நிதியாண்டில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் விநியோகக் கழகம் (TANGEDCO) ரூ.9,192 கோடி நஷ்டத்தைச் சந்தித்துள்ளது.

ஆனால், அதன் பின் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால், TANGEDCO-வின் கீழ் இயங்கும், தமிழ்நாடு மின் விநியோகக் கழகம் லிமிடெட் (TNPDCL) 2024-25 நிதியாண்டில் ரூ.2,073 கோடி லாபம் ஈட்டியுள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.