My Lord: தனிமையில இருக்காதீங்க, நிறைய பேர்கிட்ட பேசுங்கன்னு.!- மாரிசெல்வராஜ் அட்வைஸ் குறித்து பாலா
இயக்குநர் ராஜு முருகன் இயக்கத்தில் சசிகுமார், சைத்ரா, குரு சோமசுந்தரம் ஆகியோர் நடித்திருக்கும் படம் மை லார்ட் .
இத்திரைப்படம் பிப்ரவரி 13ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று ( பிப்.7) சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினருடன் இயக்குநர் பாலா, மாரி செல்வராஜ், த.செ. ஞானவேல், பிரேம்குமார், விஜய் மில்டன், ரவிக்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.
மேடையில் பேசிய இயக்குநர் பாலா, "மணிரத்னம் சாரை பிடித்திருந்தால் அவர் படத்தில் என்ன செய்தாலும் நமக்கு பிடித்துவிடும்.
அப்படித்தான் எனக்கு சசிகுமாரும்... அவர் என்ன செய்தாலும் எனக்கு பிடிக்கிறது. இதுதான் ஒரு குருவாக, ஒரு அண்ணனாக அவர் மீது எனக்கு இருக்கும் பாசம்.
ராஜுமுருகன் என்ன படம் எடுத்தாலும் அதை ரசிப்பதற்கு ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்கிறது.
அவரது முதல் படத்திற்கு குக்கூ, என்று பெயர் வைத்திருந்தார். இரண்டாவது படத்திற்கு ஜோக்கர் என வைத்திருந்தார்.
தற்போது மை லார்ட் என்று வைத்திருந்திக்கிறார். மை லார்ட் என்று பெயர் வைத்து கிண்டல் செய்வதற்கெல்லாம் தனி தைரியம் வேண்டும்.

நான் மேடையேறும்போது, இங்கேயாவது இரண்டு நிமிடங்கள் கூடுதலாக பேசுங்கள் என மாரி செல்வராஜ் சொன்னார்.
தனிமையில் இருக்காதீர்கள், நிறைய பேருடன் கலந்துரையாடி பேசுங்கள் என அவர் எனக்கு சொல்லியிருக்கிறார்.
அவர்தான் இப்போது எனக்கு வழிநடத்தி. இந்த நட்பு இப்படியே தொடரும் என்று நம்புகிறேன்.
அவர் ஒரு படத்தை பாராட்டினார் என்றால் அது தரமாக இருக்கும். அப்படித்தான் மை லார்டும் இருக்கும்" என்று பேசியிருக்கிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


