U19 World Cup: 15 சிக்ஸ்,15 பவுண்டரி,175 ரன்கள் - அதிரடி காட்டிய சூர்யவன்ஷி; குவியும் பாராட்டுகள்!

யு19 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடிய இந்திய அணியின் நட்சத்திர வீரர் வைபவ் சூர்யவன்ஷி 175 ரன்களை விளாசி சாதனைப் படைத்திருக்கிறார்.

யு19 உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடி வருகிறது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஆயுஷ் மாத்ரே பேட்டிங்கை தேர்வு செய்தார்.

வைபவ் சூர்யவன்ஷி

இதன்பின் தொடக்க வீரராக வைபவ் சூர்யவன்ஷி - ஆரோன் ஜார்ஜ் கூட்டணி ஆடியது.

இதில் ஆரோன் ஜார்ஜ் 9 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன்பின் வைபவ் சூர்யவன்ஷி - ஆயுஷ் மாத்ரே கூட்டணி இணைந்தது.

இருவரும் அதிரடியாக விளையாடினர். இதில் சூர்யவன்ஷி 80 பந்துகளில் 15 சிக்ஸ், 15 பவுண்டரி உட்பட 175 ரன்களை எடுத்து சாதனைப் படைத்திருக்கிறார்.

ஆட்டத்திற்கு பிறகு வைபவ் சூர்யவன்ஷி பெவிலியன் நோக்கி நடந்த வந்தபோது, ஒட்டுமொத்த இங்கிலாந்து வீரர்களும் அவருக்கு கை கொடுத்து பாராட்டு தெரிவித்திருக்கின்றனர்.

அதேபோல் இந்திய அணியின் அத்தனை வீரர்களும் எழுந்து நின்று பாராட்டியிருக்கின்றனர்.

வைபவ் சூர்யவன்ஷி
வைபவ் சூர்யவன்ஷி

இளம் வயதில் (14) கிரிக்கெட்டில் மிரளவைக்கும் சூர்யவன்ஷிக்கு பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

தற்போது 28.1 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 268 ரன்களை இந்திய அணி எடுத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.