காலை போலவே மாலையில் மீண்டும் தங்கம் விலை அதிரடி உயர்வு: ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,560 அதிகரிப்பு!
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களின் மாற்றத்தால், காலை மற்றும் மாலை என இருவேளைகளிலும் தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து வருவது சாமானிய மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இன்று காலையில் சவரனுக்கு 640 ரூபாய் உயர்ந்த நிலையில், மாலையில் மேலும் 1,920 ரூபாய் அதிகரித்து, மொத்தமாக ஒரே நாளில் சவரனுக்கு 2,560 ரூபாய் உயர்ந்துள்ளது.
இதன்படி, சென்னையில் இன்று ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,14,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.14,270-ஆக உள்ளது.
தங்கத்தை போலவே வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி 300 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி 3 லட்சம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
இந்த விலை உயர்வு இல்லத்தரசிகளுக்கும், திருமண விசேஷங்களுக்கு தங்கம் வாங்க திட்டமிட்டிருப்பவர்களுக்கும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Siva
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

