டிரம்ப் வரிகுறைப்பு எதிரொலி.. 2300 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்.. உச்சத்தில் பங்குச்சந்தை..

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்தியா மீதான இறக்குமதி வரிகளை குறைப்பதாக அறிவித்ததை தொடர்ந்து, இந்திய பங்குச்சந்தையில் இன்று வரலாறு காணாத எழுச்சி ஏற்பட்டுள்ளது. வர்த்தக தொடக்கத்திலிருந்தே முதலீட்டாளர்கள் உற்சாகத்துடன் பங்குகளை வாங்கியதால், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் சுமார் 2300 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 84,062 என்ற வரலாற்று உச்சத்தை தொட்டது. அதேபோல், தேசிய பங்குச்சந்தை நிப்டி 721 புள்ளிகள் உயர்ந்து முதலீட்டாளர்களுக்கு பெரும் லாபத்தை ஈட்டித் தந்தது.

 

இந்த அதிரடி உயர்வுக்கு ட்ரம்ப் - மோடி இடையிலான சுமுகமான பேச்சுவார்த்தையே முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக, அமெரிக்காவிற்கு அதிகளவில் மென்பொருள் மற்றும் பொருட்களை ஏற்றுமதி செய்யும் தகவல் தொழில்நுட்பம் , மருந்தகத் துறை மற்றும் வாகன உற்பத்தித் துறைகளின் பங்குகள் இன்று மிகப்பெரிய அளவில் ஏற்றம் கண்டன. 

 

இந்தியாவின் 140 கோடி மக்களின் சார்பாக பிரதமர் மோடி தெரிவித்த நன்றி செய்தியும், இரு நாடுகளுக்கு இடையிலான பொருளாதார நெருக்கமும் சர்வதேச முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரித்துள்ளது. இந்த அதிரடி மாற்றத்தால் ஒரே நாளில் முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு பல லட்சம் கோடி ரூபாய் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Edited by Siva

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.