தலைகீழாக குறைந்த தங்கம் வெள்ளி: இன்று ஒரேநாளில் ரூ.55000 குறைந்த வெள்ளி விலை.. தங்கம் விலை ரூ.7600 குறைவு..

சென்னையில் இன்று தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்து நுகர்வோரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த சில நாட்களாக உச்சத்தில் இருந்த தங்கம் விலை, இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.7,600 குறைந்துள்ளது. இதன்படி, சென்னையில் ஆபரண தங்கம் 1 கிராம் ரூ.14,900-க்கும், ஒரு சவரன் ரூ.1,19,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 

அதேபோல், 24 காரட் ஒரு கிராம் ரூ.16,255-ஆகவும், 8 கிராம் ரூ.1,30,040-ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 29 அன்று தங்கம் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்த நிலையில், அடுத்தடுத்த இரண்டு நாட்களில் விலை சரிந்து வருவது குறிப்பிடத்தக்கது. 

 

வெள்ளியின் விலையும் இன்று பெருமளவு சரிந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.350-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.3,50,000-க்கும் விற்பனையாகிறது. அதாவது நேற்றைய விலையில் இருந்து இன்று ரூ.55000 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரம் மற்றும் இறக்குமதி வரி மாற்றங்கள் இந்த விலை வீழ்ச்சிக்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.

 

Edited by Siva

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.