VIT பல்கலைக்கழகம் முன்னெடுக்கும் உழவர் சங்கமம் 2026: மண்ணோடு அறிவு இணையும் விவசாயிகளுக்கான திருவிழா

விவசாயத்தில் புதிய தொழில்நுட்பம், இயற்கை முறைகள், மதிப்பு கூட்டிய தயாரிப்புகள், அரசு திட்டங்கள், சந்தை வாய்ப்புகள் - இவை அனைத்தையும் ஒரே இடத்தில் அறிந்து கொள்ளும் ஒரு அரிய வாய்ப்பு உழவர் சங்கமம் – 2026.

இந்த மாபெரும் வேளாண் முயற்சியை, VIT பல்கலைக்கழகம் முன்னெடுத்து நடத்துகிறது. விவசாய அறிவை அனைவருக்கும் கொண்டு செல்லும் நோக்கில், அனைவருக்கும் அனுமதி இலவசம். பாரம்பரிய விவசாயத்தின் அனுபவமும், நவீன வேளாண் தொழில்நுட்பத்தின் முன்னேற்றமும் ஒரே மேடையில் சந்திக்கும் இந்த அறிவுத் திருவிழா:

இடம்: VIT பல்கலைக்கழக வளாகம், வேலூர்
தேதி: பிப்ரவரி 5 & 6, 2026
நேரம்: காலை 9.00 - மாலை 5.00

உழவர் சங்கமம் 2026

என்ன கற்றுக்கொள்ளலாம்?

உழவர்களுக்கான கருத்தரங்கம் மற்றும் வேளாண் கண்காட்சி என இரட்டை பயனுடன் நடைபெறும் இந்த நிகழ்வில்,

* புதிய பயிர் ரகங்கள்

* நீர் மேலாண்மை முறைகள்

* உயிர் உரங்கள் & இயற்கை விவசாயம்

* ட்ரோன் விவசாயம்

* நவீன வேளாண் இயந்திரங்கள்

போன்ற பல்வேறு தொழில்நுட்பங்களையும் நடைமுறை அனுபவங்களையும் நேரடியாக அறிந்துகொள்ளலாம்.

உழவர் சங்கமம் 2026
உழவர் சங்கமம் 2026

யாருக்கெல்லாம் பயன்?

இந்த உழவர் சங்கமத்தில்,

* விவசாயிகள்

* விவசாய மாணவர்கள்

* ஆராய்ச்சி நிறுவனங்கள்

* தோட்டக்கலை, கால்நடை, விதை துறைகள்

* தனியார் வேளாண் தொழில்நுட்ப நிறுவனங்கள்

* வேளாண் தொழில்முனைவோர்

என விவசாயம் தொடர்புடைய அனைவரும் கலந்து கொண்டு அறிவும் தெளிவும் பெறலாம்.



கண்காட்சியின் முக்கிய அம்சங்கள் :

* பாரம்பரிய விதைகள் & புதிய பயிர் வகைகள்

* நீர் மேலாண்மை தொழில்நுட்பங்கள்

* மண் & நீர் வள பாதுகாப்பு

* உயிர் உரங்கள்

* கால்நடை & கோழி வளர்ப்பு

* ஒருங்கிணைந்த பண்ணை முறை

* மதிப்பு கூட்டிய விவசாய தயாரிப்புகள்

* விவசாய கடன் & காப்பீடு தகவல்கள்

*விதை சான்றிதழ்

* மகளிர் சுய உதவி குழுக்கள்

* விவசாய வணிகம் & வர்த்தகம்

* ட்ரோன் தொழில்நுட்பம்

* காடு வளர்ப்பு & மரக்கன்றுகள்

* இயற்கை & அங்கீகரிக்கப்பட்ட விவசாய முறைகள்

* மலைப் பயிர்கள் & தோட்டக்கலை

* தேன், காளான் வளர்ப்பு போன்ற கூடுதல் வருமான வாய்ப்புகள்

* விவசாய உற்பத்தியாளர் நிறுவனங்கள் 

* அரசின் விவசாயத் திட்டங்கள்

உள்ளிட்ட பல விவரங்களை அறிந்து கொள்ளலாம். அறிவை வளர்த்து, வருமானத்தை பெருக்க உழவர் சங்கமம் – 2026 , வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கத்தை தவறவிடாதீர்கள். கலந்து கொண்டு வளர்ந்து முன்னேறுங்கள்!

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.