ஜனநாயகன்: உத்தரவு ரத்து; மீண்டும் தனி நீதிபதி முன் விசாரணை - மீண்டும் தள்ளிப் போகும் ஜனநாயகன் | live Updates

தணிக்கை வாரியத்திற்கு உரிய அவகாசம் வழங்க வேண்டும்-உயர்நீதிமன்றம்

ஜனநாயகன்| விஜய்

மத அடையாளங்களை அவதூறு செய்வதை ஏற்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வு கண்டனம் தெரிவித்திருக்கிறது. மேலும் தணிக்கை வாரியத்திற்கு உரிய அவகாசம் வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

மீண்டும் தள்ளிப்போகும் ஜனநாயகன்

ஜனநாயகன் | விஜய்
ஜனநாயகன் | விஜய்

சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவைத் தொடர்ந்து மீண்டும் தள்ளிப்போகிறது விஜய்யின் ஜனநாயகன் படம்.

சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

KVN Productions
KVN Productions

நடிகர் விஜயின் ஜனநாயகன் படத்துக்கு உடனடியாக சென்சார் சான்று வழங்கும்படி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு ரத்து.

அதே நேரம் வழக்கை தனி நீதிபதி பி.டி ஆஷா மீண்டும் விசாரிக்கவும் உத்தரவு.

தனி நீதிபதி முன்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் வைக்கப்பட்ட கோரிக்கையை மாற்றி அமைக்க பட தயாரிப்பு நிறுவனத் (KVN Productions) தரப்புக்கு அனுமதி.

தணிக்கை வாரியம் மேல்முறையீடு சென்றது சரி

"தணிக்கை வாரியம் பதிலளிக்க தனி நீதிபதி தீர்ப்பில் அவகாசம் தரப்படவில்லை. தணிக்கை வாரியம் மேல்முறையீடு சென்றது சரி" என்றும் பட தயாரிப்பு நிறுவனம் தங்கள் கோரிக்கை மனுவை திருத்தம் செய்துகொள்ளலாம் ( தனி நீதிபதி முன்பு விசாரணைக்கு வரும் போது ) என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.

மீண்டும் விசாரிக்க உத்தரவு 

ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிட்டிருந்த தனி நீதிபதி பி.டி ஆஷா உத்தரவை ரத்து செய்திருக்கும் சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் இந்த வழக்கை விசாரிக்க உத்தரவிட்டிருக்கிறது.

தனி நீதிபதியின்  உத்தரவு ரத்து 

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிட்டிருந்த தனி நீதிபதி பி.டி ஆஷா உத்தரவை ரத்து செய்திருக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்.

தொடங்கிய தீர்ப்பு வாசிப்பு 

ஜனநாயகன் படத்துக்கானத் தணிக்கை சான்று வழங்கக் கோரிய வழக்கில் தற்போது தீர்ப்பு வாசிக்கப்பட்டு வருகிறது.

ஜனநாயகன் சென்சார் வழக்கு 

விஜய்யின் கடைசி திரைப்படமாக அறிவிக்கப்பட்ட ஜனநாயகன் பொங்கல் வெளியீடாக திரைக்கு வரவிருந்தது.

ஆனால் படத்தை பார்த்த தணிக்கை வாரியம், சென்சார் வழங்க மறுத்து மறு ஆய்வு செய்ய பரிந்துரை அளித்தது. இதை எதிர்த்து, அப்படத்தை தயாரித்துள்ள கே.வி.என். நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.டி.ஆஷா, உடனடியாக சென்சார் வழங்க உத்தரவிட்டு, மறுஆய்வு பரிந்துரையை ரத்து செய்தார்.

தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்தது.

ஜனநாயகன்
ஜனநாயகன்

இந்நிலையில், கடந்த 20ஆம் தேதி தலைமை நீதிபதி அமர்வில் விசாரணை நடைபெற்றது.

தயாரிப்பு நிறுவனம் மற்றும் தணிக்கை வாரியத்தின் வாதங்களை கேட்ட நீதிபதி திரைப்படத்திற்கு, தயாரிப்பாளர்கள் சான்று பெறும் முன் வெளியீட்டு தேதியை எப்படி அறிவிக்க முடியும் என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

மேலும், ஒரே நாளில் அனைத்து நீதிமன்ற நடைமுறைகளையும் முடித்து, உத்தரவு பெற வேண்டும் என்பதை ஏற்க முடியாது என்றும் தெரிவித்திருந்தது.

இந்த வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று (ஜன.27) தீர்ப்பு வழங்குகிறது. இன்று காலை 10்.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.