தமிழகத்தில் தொடரும் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்!! மாணவர்களின் கல்வி பாதிப்பு!!

சம வேலை சம ஊதியம்  என்ற அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்து  போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த டிச.26-ம் தேதி முதல் தமிழகத்தில் நடத்தப்பட்டு வரும் போராட்டத்தால் பெரும்பாலான ஆசிரியர்கள் பள்ளிக்கு வராமல் இருப்பதால் தொடக்கப் பள்ளி மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது.


சென்னை எழும்பூர் மற்றும் பூங்கா நகர் ரயில் நிலையம் அருகே இடைநிலை ஆசிரியர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.


இந்த போராட்டம் ஒரு மாதத்தை நெருங்கும் நிலையில் மாணவர்களின் நலன் கருதி இந்த பிரச்சினையை விரைவில் முடிவுக்கு கொண்டுவர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் கூறுகின்றனர். 

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.