தங்கம், வெள்ளி விலை இன்று திடீர் சரிவு.. சென்னையில் 1 சவரன் எவ்வளவு?
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அதிரடியாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலை, இன்று சற்று சரிவை கண்டுள்ளது.
நேற்று ஒரே நாளில் இரண்டு முறை விலை உயர்த்தப்பட்ட நிலையில், இன்று ஆபரண தங்கம் மற்றும் வெள்ளியின் விலை குறைந்துள்ளது நகைப்பிரியர்களுக்கு சற்று நிம்மதியை அளித்துள்ளது.
இன்றைய நிலவரப்படி, ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.14,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் ஒரு சவரன் தங்கம் ரூ.1,13,600 என்ற நிலையை எட்டியுள்ளது.
அதேபோல், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.15,491 ஆகவும், 8 கிராம் சுத்த தங்கம் ரூ.1,23,928 ஆகவும் உள்ளது. தங்கத்தை தொடர்ந்து வெள்ளியின் விலையும் இன்று குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.340-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.3,40,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தின் விலை உச்சத்தைத் தொட்டு வரும் வேளையில், இன்று ஏற்பட்டுள்ள இந்தச் சிறு விலைச் சரிவு திருமண வீட்டாருக்கும், சிறு முதலீட்டாளர்களுக்கும் ஒரு நல்வாய்ப்பாகப் பார்க்கப்படுகிறது.
Edited by Siva
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

