T20 WC 2026 : உலகக் கோப்பையை முதன்முறையாக வீட்டில் அமர்ந்து பார்ப்பது.!- மனம் திறந்த ரோஹித்

டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடர் வரும் பிப்​ர​வரி 7-ம் தேதி இந்​தியா மற்​றும் இலங்​கை​யில் தொடங்​க இருக்கிறது.

இந்நிலையில் நடப்பு சாம்பியனான இந்​திய அணி தனது முதல் ஆட்​டத்​தில் தொடக்க நாளில் அமெரிக்கா​வுடன் மோத உள்​ளது.

இந்நிலையில் ட20 சர்வதேச போட்டிகளில் ஓய்வு பெற்று ஒருநாள் போட்டிகளில் மட்டும் விளையாடும் ரோஹித் ஷர்மா வரும் டி20 உலகக்கோப்பையில் தான் விளையாட முடியாதது குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார்.

டி 20 உலகக் கோப்பை

இதுதொடர்பாக நேர்காணல் ஒன்றில் பேசியிருக்கும் அவர், "2007ம் ஆண்டு 20 ஓவர் உலகக் கோப்பை போட்டி அறிமுகம் ஆனதில் இருந்து ஒவ்வொரு உலகக் கோப்பை தொடரிலும் பங்கேற்று இருக்கிறேன்.

இந்த முறை அந்த போட்டியை வீட்டில் இருந்தபடி பார்ப்பது வித்தியாசமாக இருக்கும்.

எப்போதுமே உலகக் கோப்பை போட்டிக்கு முன்பாக சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டி இருக்கும். எனது கேப்டன்ஷிப்பில் பல முறை நடந்துள்ளது.

எல்லோரையும் உங்களால் திருப்திப்படுத்த முடியாது. ஆனால் அந்த முடிவு (அணியில் நீக்கம்) ஏன் எடுக்கப்பட்டது என்பதை சம்பந்தப்பட்ட வீரர்கள் தெரிந்து கொள்வது முக்கியம்.

ரோஹித் ஷர்மா
ரோஹித் ஷர்மா

2022-ம் ஆண்டு டி 20 உலகக் கோப்பை மற்​றும் ஆசிய கோப்பை தொடரில் பந்து வீச்சு மற்​றும் பேட்​டிங்​கிலும் சிறப்​பாக செயல்​படக்​கூடிய வீரர் தேவை என கரு​தினோம்.

இதன் காரண​மாக ஸ்ரேயஸ் ஐயருக்கு பதிலாக தீபக் ஹூடாவை தேர்வு செய்​தோம். எங்​களைப் பொறுத்​தவரை, அணி​யில் உள்ள 15 வீரர்​களை எவ்​வாறு சிறப்​பாகப் பயன்​படுத்​தலாம் என்​பது தான் முக்கியம்.

உலகக் கோப்​பையை நோக்​கிச் செல்​லும்​போது, அதை வெல்​வது​தான் ஒரே குறிக்​கோள். அதற்​கு, உங்​களுக்கு வெளிப்​படை​யான உரை​யாடல்​கள் தேவை" என்று ரோஹித் ஷர்மா பேசியிருக்கிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.