Egg less Cakes: `கேரட் கேக் - அசத்தலாக வீட்டிலேயே செய்வது எப்படி?

கேரட் கேக்

தேவையானவை:

கோதுமை மாவு – ஒன்றரை கப்

கார்ன் மாவு - 2 டேபிள்ஸ்பூன்

துருவிய கேரட் – ஒரு கப்

எண்ணெய் – அரை கப் +

2 டேபிள் ஸ்பூன்

தயிர் – ஒரு கப்

பால் – கால் அல்லது அரை கப்

வெனிலா எசென்ஸ் - ஒரு டீஸ்பூன்

பொடித்த வெல்லம் -

ஒன்றேகால் கப்

பேக்கிங் பவுடர் - ஒரு டீஸ்பூன்

பேக்கிங் சோடா - அரை டீஸ்பூன்

ஆல் ஸ்பைஸ் பவுடர் - ஒரு டீஸ்பூன் (இது கிடைக்கவில்லையென்றால் ஏலக்காய், ஜாதிக்காய், ஒரு சிறிய துண்டு பட்டை ஆகியவற்றைச் சேர்த்து பொடி செய்து கொள்ளவும்)

பொடித்த சர்க்கரை – அலங்கரிக்க

கேரட் கேக்

செய்முறை:

மைக்ரோவேவ் ஓவனை 180 டிகிரி செல்சியஸுக்கு பிரீஹீட் செய்யவும். கோதுமை மாவுடன் கார்ன் மாவு, பேக்கிங் பவுடர், ஆல்ஸ்பைஸ் பவுடர், பேக்கிங் சோடா எல்லாவற்றையும் சேர்த்து மூன்று முறை சலித்து வைத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் அரை கப் எண்ணெய், தயிர், பொடித்த வெல்லம், வெனிலா எசென்ஸ் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக அடிக்கவும். பிறகு இதனுடன் துருவிய கேரட்டையும் சேர்த்துக் கலக்கவும்.

பிறகு சலித்துவைத்துள்ள மாவை இதனுடன் சிறிது சிறிதாகச் சேர்த்து கலக்கவும். இதனுடன் தேவைப்படும் அளவுக்குப் பால் ஊற்றி கேக் மாவுப் பதத்துக்கு நன்றாகக் கலக்கவும். ஒரு பேக்கிங் பானில் எண்ணெய் தடவி அதன் அடியில் பேக்கிங் பேப்பர் வைக்கவும். அதன் மேல் சிறிதளவு எண்ணெய் தடவி தயாரித்துவைத்துள்ள கேக் மாவை அதில் ஊற்றிச் சமப்படுத்தவும்.

பிரீஹீட் செய்துள்ள ஓவனில் இதனை வைத்து 45-ல் இருந்து 50 நிமிடங்கள் வரை நன்றாக பேக் செய்து எடுக்கவும். கேக் நன்றாக ஆறிய பிறகு அதன் மேல் பொடித்த சர்க்கரை தூவிப் பரிமாறவும்.

பண்டைய கிரேக்கர்கள் மாவுடன் தேனும் பருப்புகளும் சேர்த்துச் சமைத்த கேக்கின் பெயர் `Plakous’. அதற்கு ‘தட்டையான உணவு’ என்று பொருள்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.