ஜனநாயகன் தீர்ப்பு: கோர்ட்டில் முடிந்த வாதங்கள்! ரிலீஸ் எப்போது?
தளபதி விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் மிக முக்கியமான சென்சார் வழக்கின் விசாரணை இன்று முடிவுக்கு வந்தது. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளது.
சுமார் 5 மணி நேரம் நடந்த இந்த காரசாரமான விவாதத்தில், சென்சார் போர்டு தரப்பில், “படத்தில் மத உணர்வுகள் மற்றும் ராணுவம் சார்ந்த காட்சிகள் சர்ச்சையாக உள்ளன, அதை மறுபடியும் செக் பண்ணியே ஆகணும்” என கறாராக வாதிடப்பட்டது.
தயாரிப்பாளர் தரப்போ, “ஏற்கனவே சொன்ன எல்லா கரெக்ஷனையும் பண்ணிட்டோம். ஆனா, யாரோ ஒருத்தர் புகார் கொடுத்தார்ங்கிறதுக்காக மொத்த படத்தையும் இப்படி முடக்கி வைக்கிறது எந்த விதத்துல நியாயம்? 500 கோடி ரூபாய் முதலீடு கண்ணு முன்னாடி கருகிட்டு இருக்கு” என குமுறினர்.
காத்திருக்கும் ரசிகர்கள்: “ஜனநாயகன்” வெறும் படம் மட்டும் கிடையாது, இது அரசியலில் காலடி எடுத்து வைக்கும் விஜய்யின் கடைசி படம் என்பதால் எகிறிக்கிடக்கும் எதிர்பார்ப்பு இப்போது ஏமாற்றத்தில் முடிந்துவிடுமோ என்ற அச்சத்தில் ரசிகர்கள் உள்ளனர். கோர்ட் கொடுக்கப்போகும் அந்த “ஒரு வார்த்தை”க்காக மொத்த தமிழகமும் வெயிட்டிங்!
The post ஜனநாயகன் தீர்ப்பு: கோர்ட்டில் முடிந்த வாதங்கள்! ரிலீஸ் எப்போது? appeared first on Tamilnadu Flash News.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

