அசைவத்துக்கு சவால் விடும் சைவ ரெசிப்பி: வாழைப்பூ (அயிரை மீன்) குழம்பு! - வீட்டிலேயே செய்வது எப்படி?

வாழைப்பூ (அயிரை மீன்) குழம்பு

தேவையானவை:

நரம்பு நீக்காத வாழைப்பூ - ஒரு கப்

சின்ன வெங்காயம் - 10 (நறுக்கவும்)

தக்காளி - 2 (நறுக்கவும்)

பச்சை மிளகாய் - 2 (காம்பு பக்கம் கீறவும்)

கறிவேப்பிலை – சிறிதளவு

மிளகாய்த்தூள் - 2 டேபிள்ஸ்பூன்

மல்லித்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்

சோம்புத்தூள் - ஒரு டீஸ்பூன்

மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்

எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்

வெந்தயம் - அரை டீஸ்பூன்

சோம்பு – அரை டீஸ்பூன்

புளி - எலுமிச்சை அளவு

எண்ணெய் - 200 மில்லி

உப்பு - தேவையான அளவு

பொரிப்பதற்கு:

கடலை மாவு - கால் கப்

மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்

உப்பு - அரை டீஸ்பூன்

வாழைப்பூ (அயிரை மீன்) குழம்பு

செய்முறை:

புளியுடன் தேவையான உப்பு சேர்த்து 4 டம்ளர் தண்ணீரில் கரைத்து வடிகட்டி எடுத்து வைக்கவும். கால் கப் கடலை மாவுடன் மிளகாய்த்தூள், உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவுப் பதத்துக்குக் கரைத்துக்கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய்விட்டு சூடேறியதும் வாழைப்பூவை ஒவ்வொன்றாக, கரைத்த மாவில் தோய்த்துப் பொரித்தெடுக்கவும். பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றிச் சூடாக்கி வெந்தயம், சோம்பு தாளிக்கவும். பின்பு வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

.கலவை நன்கு வதங்கியதும், அடுப்பைக் குறைவான தீயில்வைத்து மிளகாய்த்தூள், மல்லித்தூள், சோம்புத்தூள், மஞ்சள்தூள் சேர்த்துக் கிளறவும். பின்னர் இதில் கரைத்துவைத்துள்ள புளியை ஊற்றி நன்கு கொதிக்கவிடவும். குழம்பு நன்றாகக் கொதித்து எண்ணெய் மிதந்துவந்ததும் பொரித்துவைத்துள்ள வாழைப்பூவை இதில் சேர்த்து இறக்கவும். சாப்பிடும்போது மீன் முள்ளை நீக்குவது போல வாழைப்பூவின் நரம்பை நீக்கி சாப்பிடவும்.

வாழைப்பூவுடன் பாசிப்பருப்பு சேர்த்துக் கடைந்து, அதனுடன் சிறிது நெய் சேர்த்து வாரம் இருமுறை உண்டுவந்தால், உடல்சூடு தணியும்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.