விதவிதமான இட்லி ரெசிப்பி: `கடலைப்பருப்பு இட்லி செய்வது எப்படி?

கடலைப்பருப்பு இட்லி

தேவையானவை:

கடலைப்பருப்பு - முக்கால் கப்

துவரம்பருப்பு - அரை கப்

இட்லி அரிசி - ஒரு கப்

பச்சரிசி - ஒரு கப்

உளுத்தம்பருப்பு - அரை கப்

உப்பு - தேவையான அளவு

கடலைப்பருப்பு இட்லி

செய்முறை:

பருப்பு வகைகளையும் அரிசியையும் உளுத்தம்பருப்பையும் தனித்தனியாக இரண்டு மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். கடலைப்பருப்பு, துவரம்பருப்பை தேவையான தண்ணீர்விட்டு கொரகொரப்பாக அரைக்கவும். இட்லி அரிசி மற்றும் பச்சரிசியையும் மைய அரைத்துக்கொள்ளவும். ஊறவைத்த உளுத்தம்பருப்பையும் நன்றாக அரைத்து, அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து உப்பு போட்டு நன்றாகக் கலக்கவும். பின்னர் இட்லிகளாக ஊற்றவும்.

குறிப்பு:

விருப்பமெனில் மாவில் தாளிப்பு சேர்த்தும் இட்லிகளாக ஊற்றலாம்.

இட்லியின் சில அவதாரங்கள்: புளிக்க வைக்கப்படாத மாவில் ‘டோக்ளா’ (குஜராத்), புளிக்கச் செய்து கள் சேர்த்து, சிறிது இனிப்புடன் ‘வட்டப்பம்’ (கேரளம்), ‘சன்னாஸ்’ (மங்களூரு).

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.