விதவிதமான இட்லி ரெசிப்பி: `காஞ்சிபுரம் இட்லி செய்வது எப்படி?

காஞ்சிபுரம் இட்லி

தேவையானவை:

பச்சரிசி - ஒரு டம்ளர்

உளுத்தம்பருப்பு – கால் டம்ளர்

வெந்தயம் - சிறிதளவு

மிளகு - கால் டீஸ்பூன்

சீரகம் - கால் டீஸ்பூன்

சுக்குப்பொடி - சிறிதளவு அல்லது பொடியாக நறுக்கிய ஒரு இஞ்சித்துண்டு

பெருங்காயம், கறிவேப்பிலை - சிறிதளவு

முந்திரி உடைத்தது - 3 டீஸ்பூன்

நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு

காஞ்சிபுரம் இட்லி

செய்முறை:

பச்சரிசியைத் தனியாகவும், வெந்தயம், உளுத்தம்பருப்பைத் தனியாகவும் இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும். பின்பு ஊறவைத்த உளுத்தம்பருப்பை நன்றாக அரைத்துக்கொள்ளவும். ஊறவைத்த பச்சரிசியை நான்கு மணி நேரம் கழித்து கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி மிளகு, சீரகம், பொடியாக நறுக்கிய இஞ்சி அல்லது சுக்குப்பொடி, பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும்.

இதை அரைத்துவைத்திருக்கும் மாவில் கலக்கவும் நீளமான டம்ளரின் உள்ளே எண்ணெய் அல்லது நெய் தடவிய வாழையிலையைச் சுற்றி வைக்கவும். பின்பு அரைத்துவைத்துள்ள மாவை அதில் ஊற்றவும். பின்பு முந்திரி பருப்பை அதன்மேல் தூவி விடவும். இட்லி பானை அல்லது குக்கரில் டம்ளரை வைத்து 15 நிமிடங்கள் வேகவைத்து பின்பு எடுக்கவும். காஞ்சிபுரம் இட்லி தயார்.

இந்தோனேசியாவில் இட்லியை `கெட்லி’ (Kedli) என்கிறார்கள். அதுதான், `இட்லி’ என மருவியது என்று கூறப்படுகிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.