ஜனநாயகன்: `அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு - தள்ளிப்போகும் ஜனநாயகன் ரிலீஸ்? | Live Updates

தீர்ப்பை ஒத்திவைத்த நீதிமன்றம் 

ஜனநாயகன் படத்தின் தணிக்கை சான்றிதழ் வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்திருக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்.

ஜனநாயகன் | விஜய்

தணிக்கை வாரிய தலைவர் தனது முடிவிலிருந்து பின்வாங்கியிருக்க கூடாது என்று கூறி தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஆஜரான பரசரன் தனது வாதத்தை முடிக்கிறார்.

அவரை தொடர்ந்து மூத்த வழக்கறிஞர் பிரதீப் ராய் வாதங்களைத் முன்வைத்தார். (தயாரிப்பு நிறுவனத்திற்காக)

தயாரிப்பாளர்களுக்கு எந்த ஆவணங்களும் வழங்கப்படவில்லை என்று ராய் வாதிடுகிறார். தணிக்கை வாரிய தலைவர் ஏற்கனவே, குழுவின் சார்பாக, படத்திற்கு சான்றிதழ் வழங்க முடிவு செய்தபோது, அவர் அதை மீண்டும் அனுப்பியிருக்க முடியாது என்று வாதாடினார்.

தணிக்கை வாரிய வழக்கறிஞர்(ASG), மறுமொழி வாதங்களை முன்வைக்கிறார். எதிர்வாதம் செய்ய வாய்ப்பு அளிக்கப்பட்டால் மட்டுமே உண்மைகளை ஒப்புக்கொள்ளப்பட்டதாகக் கருத முடியும் என்று கூறுகிறார்.

உறுப்பினர் ஒருவர் தாமதமாக புகார் அளிக்க முடியாது என்று கூறுவது சரியல்ல. அதுவும் படத்தில் ஆயுதப்படை சரியாகக் காட்டப்படவில்லை என்ற புகார் தெரிவித்திருக்கிறார்.

ஆயுதப்படையைக் காட்டும்போது, நெறிமுறை பின்பற்றப்பட வேண்டும். இது குழுவால் மட்டும் முடிவு செய்யப்படாமல், நிபுணர் அழைக்கப்படலாம். புகார் சரியானதா என்பதை தலைவர் தான் முடிவு செய்ய வேண்டும்.

5 உறுப்பினர்களைத் தவிர உலகில் உள்ள எந்த நபரிடமிருந்தும் தகவல் பெற முடியாது என்று கூற முடியாது என்றார்.

CBFC தலைவருக்கு தன்னிச்சையான (suo motu) அதிகாரங்கள் உள்ளன, அவர் பெற்ற புகாரின் அடிப்படையிலேயே நடவடிக்கை எடுத்துள்ளார். , அந்த புகாரை கருத்தில் கொண்டு திரைப்படம் மீண்டும் பரிசீலிக்கப்பட வேண்டும் என்று தலைவர் கருதியதாகவும் ASG (தணிக்கை வாரியம் )கூறுகிறார்.

"அனைத்து நடைமுறைகளையும் ஒரே நாளில் முடிக்க முடியாது"- நீதிபதிகள்

"திட்டமிட்டப்படி படத்தை வெளியிடாததால் எங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தணிக்கை வாரிய நடைமுறைகள் மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளன"பட தயாரிப்பு நிறுவனம் கூறியிருக்கிறது.

"ஒரே நாளில் அனைத்து நடைமுறைகளையும் முடித்து உத்தரவு வழங்க வேண்டும் என்பதை ஏற்க முடியாது" - என்று நீதிபதிகள் தெரிவித்திருக்கின்றனர்.

தணிக்கை வாரியம் மீது பட தயாரிப்பு நிறுவனம் குற்றம்சாட்டு 

"தணிக்கை சான்று விவகாரத்தில் டிசம்பர் 29 ஆம் தேதிக்கு பிறகு அனைத்தும் மறைக்கப்பட்டது. ஜனநாயகன் விஷயத்தில் வெளிப்படைத்தன்மை மீறப்பட்டுள்ளது" என்று தணிக்கை வாரியம் மீது பட தயாரிப்பு நிறுவனம் குற்றம்சாட்டியிருக்கிறது.

யாரிடம் இருந்து உங்களுக்கு புகார் கிடைத்தது?

"படத்திற்கு எதிராக யாரிடம் இருந்து உங்களுக்கு புகார் கிடைத்தது?" என்று நீதிபதி கேள்வி எழுப்பி இருக்கிறார். மும்பையில் உள்ள தணிக்கை வாரிய தலைவரிடம் இருந்து புகார் வந்தது" என தணிக்கை வாரியம் தெரிவித்திருக்கிறது.

"2 நாட்களில் முடிவு செய்ய வேண்டும்"- பட தயாரிப்பு நிறுவனம்

"விதிகளின் படி இரண்டு நாட்களில் தணிக்கை வாரியம் சான்றிதழ் வழங்குவது பற்றி முடிவு செய்ய வேண்டும். விதிகளை ஆய்வு செய்தே நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்"- பட தயாரிப்பு நிறுவனம்

தலைமை நீதிபதி

"போதுமானக் கால அவகாசத்தை தணிக்கை வாரியத்திற்கு கொடுத்திருக்க வேண்டும்"- தலைமை நீதிபதி

தணிக்கை வாரிய வாதம் 

"18/12 அன்று தயாரிப்பாளர் விரைவான (தட்கால்) பரிசீலனைக்காக விண்ணப்பம் செய்தார்.

19/12 அன்று குழு (கமிட்டி) அதை ஆய்வு செய்தது.

22/12 அன்று, சில வெட்டுகள் (incisions) செய்யப்பட வேண்டும் என்ற நிபந்தனையுடன் குழு சான்றளிக்கும்.

25/12 அன்று தேவையான வெட்டுகள் (incisions) செய்யப்பட்டு அவை குழுவிற்கு அனுப்பப்பட்டன.

ஜனநாயகன் | விஜய்
ஜனநாயகன் | விஜய்

வெளிப்படைத்தன்மையை (transparency) பேணுவதற்காக, அனைத்து தொடர்புகளும் விண்ணப்பதாரருக்கு அறிவிக்கப்பட வேண்டும் மற்றும் e-cinepraman தளத்தில் பதிவேற்றப்பட வேண்டும்

29/12க்கு பிறகு நடந்த அனைத்து தொடர்புகளும் e-cinepraman தளத்தில் பதிவேற்றப்படவில்லை.

25/12 அன்று தேவையான வெட்டுகள் (incisions) செய்யப்பட்டு அவை குழுவிற்கு அனுப்பப்பட்டன. வெளிப்படைத்தன்மையை (transparency) பேணுவதற்காக, அனைத்து தொடர்புகளும் விண்ணப்பதாரருக்கு அறிவிக்கப்பட வேண்டும் மற்றும் e-cinepraman தளத்தில் பதிவேற்றப்பட வேண்டும்.

29/12க்கு பிறகு நடந்த அனைத்து தொடர்புகளும் e-cinepraman தளத்தில் பதிவேற்றப்படவில்லை" என்று தணிக்கை வாரியம் சார்ப்பில் வாதிடப்பட்டிருக்கிறது.

தொடங்கிய பட தயாரிப்பு நிறுவன வாதம் 

"படத்தை 9-ம் தேதி வெளியிட முடிவு செய்ததால் அவசர வழக்காக விசாரிக்க தனி நீதிபதி முன்பு முறையீடு செய்தோம்". படத்தை மறு ஆய்வுக்கு அனுப்புவதாகத் தகவல் மட்டுமே தெரிவிக்கப்பட்டது. படத்துக்கு எதிரான புகார் என்ன என்பதை எங்களிடம் தணிக்கை வாரியம் கூறவில்லை. தனி நீதிபதியின் உத்தரவில் எந்தத் தவறும் இல்லை. "- பட தயாரிப்பு நிறுவனம் வாதம்

"மறு ஆய்வுக்குழு எத்தனை நாட்களில் முடிவெடுக்க வேண்டும்?"- தலைமை நீதிபதி

"மறு ஆய்வுக்குழு எத்தனை நாட்களில் முடிவெடுக்க வேண்டும்?" என தலைமை நீதிபதி கேள்வி எழுப்பியிருக்கிறார். அதற்கு "20 நாட்களில் குழு அமைக்க வேண்டும். மறு ஆய்வுக்குழு சான்று தரவில்லை எனில் நீதிமன்றத்தை அணுகலாம்" என தணிக்கை வாரியம் பதிலளித்திருக்கிறது.

மீண்டும் தொடங்கிய விசாரணை  

உணவு இடைவேளைக்குப் பிறகு ஜனநாயகன் வழக்கில் மீண்டும் விசாரணை தொடங்கி இருக்கிறது.

தணிக்கை வாரியம் வாதம் நிறைவு

ஜனநாயகன் வழக்கில் தணிக்கை வாரியம் வாதம் நிறைவு பெற்றிருக்கிறது. உணவு இடைவேளைக்கு பிறகு மீண்டும் விசாரணைத் தொடங்கும்.

"படத்தை 9-ம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளதாகவும், 500 கோடி முதலீடு செய்துள்ளதாகவும் கோரி கூறி உடனடி நிவாரணம் கோர முடியாது"- தணிக்கை வாரியம்

தீர்ப்பு குறித்து சுட்டிக்காட்டிய தலைமை நீதிபதி

இந்த வழக்கில் இன்றே தீர்ப்பு வழங்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அரைமணி நேரத்திற்கு மேலாக தணிக்கை வாரியம் வாதிடும் நிலையில் தலைமை நீதிபதி இவ்வாறு சுட்டிக்காட்டியிருக்கிறார்.

"கால அவகாசம் வழங்கியிருக்க வேண்டும்"- தணிக்கை வாரியம்

"ஜனநாயகன் வழக்கில் உண்மைகள் மற்றும் சட்ட அம்சங்கள் குறித்துப் பதிலளிக்க எங்களுக்கு ஒரு நியாயமான கால அவகாசம் வழங்கப்பட்டிருக்க வேண்டும்"- தணிக்கை வாரியம்

"இந்த விவகாரத்தில் ஒரே நாளில் முடிவெடுத்திருக்க முடியுமா?"- தலைமை நீதிபதி

"நாம் கவனிக்க வேண்டிய முக்கிய விவகாரம் என்னவென்றால், எதிர் தரப்பிற்கு (அரசுத் தரப்பிற்கு) போதுமான கால அவகாசம் வழங்கப்பட்டதா என்பதுதான். இந்த விவகாரத்தில் ஒரே நாளில் முடிவெடுத்திருக்க முடியுமா? ஆம், முடிவெடுத்திருக்க முடியும் என்று நாங்கள் கருதினால் மட்டுமே, வழக்கின் சாராம்சத்திற்குள் (merits) நாங்கள் செல்ல வேண்டியிருக்கும்"- தலைமை நீதிபதி

"தனி நீதிபதி ஒரே நாளில் முடிவு எடுத்துள்ளார்"- தலைமை நீதிபதி

"இந்த வழக்கில் தனி நீதிபதி ஒரே நாளில் முடிவு எடுத்துள்ளார். பதிலளிக்க தணிக்கை வாரியத்திற்கு அனுமதி அளிக்காமல் தனி நீதிபதி முடிவு எடுத்திருக்கிறார்" - தலைமை நீதிபதி

இறுதி முடிவிடுக்கவில்லலை - தணிக்கை வாரியம்

"ஜனநாயகன் படத்திற்கு சான்று வழங்குவதில் இறுதி முடிவிடுக்கவில்லலை" என்று தணிக்கை வாரியம் வாதத்தின்போது தெரிவித்திருக்கிறது. ஜன

நடிகர் விஜய்யின் ஜனநாயகன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்க தனி நீதிபதி உத்தரவிட்டதற்கு எதிராக திரைப்பட தணிக்கை வாரியம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் இன்று (ஜன.20) உயர் நீதிமன்றம் விசாரணையைத் தொடங்கி இருக்கிறது. நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, அருள் முருகன் அமர்வில் விசாரணைத் தொடங்கி இருக்கிறது.

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

விசாரணையின் போது, "தணிக்கை சான்றிதழ் தொடர்பாக ஜனவரி 5 ஆம் தேதியே தகவல் கொடுத்துவிட்டோம். 14 காட்சிகளை நீக்கிவிட்டதால் தணிக்கைச் சான்று வழங்கக் கோரினர் படக்குழுவினர். படத்தைப் பார்த்த பின் நாங்கள் முடிவு எடுப்போம் என்று கூறினோம். இறுதி முடிவு எடுப்பதற்கு முன் படம் தொடர்பாக புகார் வந்ததால் மறு ஆய்வுக்கு முடிவு எடுத்தோம்" என்று ஜனநாயகன் வழக்கில் தணிக்கை வாரியம் வாதங்களை முன்வைத்துள்ளது.

"மண்டல தணிக்கை வாரியத்தில் ஜனநாயகன் படத்தைப் பார்த்தது யார்? மண்டல தணிக்கை வாரிய அதிகாரி ஜனநாயகன் படத்தைப் பார்த்தாரா?" என்று நீதிபதி கேள்வி எழுப்பி இருக்கிறார்.

ஜனநாயகன் | விஜய்

"அதற்கு மண்டல தணிக்கை வாரிய அதிகாரி ஜனநாயகன் படத்தைப் பார்க்கவில்லை. தணிக்கை குழு மட்டுமே படம் பார்த்தது" என்று தணிக்கை வாரியம் சார்ப்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது. தொடர்ந்து இந்த வழக்கில் விசாரணை நடைபெற்று வருகிறது.

(More details will be added here..)ஜன

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.