சுவைக்கத் தூண்டும் சாட் : `ஆலூ சாட் - வீட்டிலேயே எளிதாக செய்வது எப்படி?

ஆலூ சாட்

உருளைக்கிழங்கு மசாலாவுக்கு தேவையானவை:

  • பாதி வேகவைத்த உருளைக்கிழங்கு - 500 கிராம் (தோலை நீக்கி சதுர வடிவில் நறுக்கவும்)

  • எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப

  • மிளகாய்த்தூள் – அரை டேபிள்ஸ்பூன்

  • உலர்ந்த மாங்காய்ப்பொடி - ஒரு டேபிள்ஸ்பூன்

  • வறுத்த சீரகத்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்

  • தனியாத்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்

  • கடலை மாவு - 2 டேபிள்ஸ்பூன்

  • சாட் செய்ய தேவையானவை:

  • கெட்டி தயிர் - அரை கப் (அடித்து வைக்கவும்)

  • பூண்டுச் சட்னி - 2 டீஸ்பூன்

  • இனிப்புச் சட்னி - 2 டீஸ்பூன்

  • பச்சைச் சட்னி - 4 டீஸ்பூன்

  • சாட் மசாலா - அரை டேபிள்ஸ்பூன்

  • வறுத்து அரைத்த சீரகத்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்

  • மிளகாய்த்தூள் - அரை டேபிள்ஸ்பூன்

  • ஓமப்பொடி (சேவ்) - அரை கப்

  • நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு

ஆலூ சாட்

செய்முறை:

உருளைக்கிழங்கைத் தவிர உருளைக்கிழங்கு மசாலா செய்வதற்குக் கொடுக்கப்பட்டுள்ள அனைத்துப்பொருள்களுடன் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றிக்கலந்து கொள்ளவும். பிறகு இக்கலவையில் உருளைக்கிழங்கையும் சேர்த்துக் கலந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும். ஒரு வாணலியில் சிறிது எண்ணெயைச் சூடாக்கி அதில் ஊறவைத்து இருக்கும் கலவையைச் சேர்த்து நான்கைந்து நிமிடங்கள் வதக்கி எடுத்துக்கொள்ளவும்.

ஒரு தட்டில் சிறிது உருளைக்கிழங்கு கலவையை வைத்து அதன் மேல் சிறிது தயிர், பூண்டுச் சட்னி, இனிப்புச் சட்னி, பச்சைச் சட்னி ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக ஊற்றவும். பிறகு அதன் மீது சாட் மசாலா, வறுத்த சீரகத்தூள், மிளகாய்த்தூள், ஓமப்பொடி (சேவ்), கொத்தமல்லி தூவிப் பரிமாறவும்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.