சென்னையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் வரலாறு காணாத உச்சம்..!

சென்னையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளன. 

 

சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்கள் மற்றும் முதலீட்டாளர்களின் ஆர்வம் காரணமாக, தமிழகத்தில் ஆபரண தங்கத்தின் விலை சாமானியர்கள் கற்பனை செய்து பார்க்க முடியாத உயரத்தை எட்டியுள்ளது.

 

இன்றைய நிலவரப்படி, சென்னையில் ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.13,450-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம், ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை ரூ.1,07,600 என்ற நிலையை எட்டியுள்ளது. இது நகை வாங்குவோரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல், தூய தங்கம் எனப்படும் 24 காரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.14,673 ஆகவும், 8 கிராம் ரூ.1,17,384 ஆகவும் உயர்ந்துள்ளது.

 

தங்கம் மட்டுமல்லாது வெள்ளியின் விலையும் விண்ணை தொட்டுள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.318-க்கு விற்பனை செய்யப்படுவதால், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.3,18,000 ஆக உயர்ந்துள்ளது. திருமண விசேஷங்கள் மற்றும் சுப காரியங்களுக்காக நகை வாங்க திட்டமிட்டுள்ள நடுத்தர குடும்பங்களுக்கு இந்த விலை உயர்வு பெரும் சுமையாக மாறியுள்ளது.

 

Edited by Siva

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.