இந்த சீமான் தான் அந்த செழியன்; தம்பி சிவகார்த்திகேயன்.! - பராசக்தி படத்தைப் பாராட்டிய சீமான்

இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திக்கேயன், அதர்வா, ரவி மோகன், ஸ்ரீ லீலா நடிப்பில் வெளியாகியிருக்கும் பராசக்தி படத்தைப் பார்த்த நாம் கட்சி தலைவர் சீமான் பாராட்டியிருக்கிறார்.

செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய சீமான், " பராசக்தியை படமாகத்தான் பார்க்க வேண்டும். அதற்கு உள்ளே காதல், அண்ணன் தம்பி, கற்பனை கலந்து உள்ளது.

பராசக்தி

இந்தியா என்பது வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட ஒரு ஐக்கியம். தமிழ் திரைப்படத்தில் தமிழ் வாழ்க என்று ஒரு சத்தம் கேட்பது வியக்க வைத்துள்ளது.

மொழிப்போர் பின்புலத்தை அந்த உணர்வை எடுத்துக்கொண்டு சுவைக்காக திரைக்கதையை அதற்கேற்றார் போல மாற்றியுள்ளனர்.

படத்தில் என்னுடைய தம்பி சிவகார்த்திகேயன் பங்களிப்பு, எதிர் நாயகனாக நடித்துள்ள ரவி மோகன் பங்களிப்பு, தம்பி அதர்வா பங்களிப்பு நேர்த்தியாக இருந்தது.

அதிலும் என் தம்பி சிவா, இறுதியில் ’தமிழ் வாழ்க’ என கையை உயர்த்திச் சொல்லும்போது நானே சொல்வதுபோல்தான் இருந்தது. இந்த சீமான் தான் அந்த செழியன்.

பராசக்தி விமர்சனம் | Parasakthi Review
பராசக்தி விமர்சனம் | Parasakthi Review

பராசக்தி ஒரு நல்ல படம். மொழிப்போரை அப்படியே காட்டவில்லை, அதேநேரம் மொழி உணர்வை சிதைக்கவில்லை" என்று படத்தைப் பாராட்டியிருக்கிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.