நாங்கள் கூட்டணிக்கு செல்வதை உரியவர்கள் அறிவிப்பார்கள் - கூட்டணி குறித்து டிடிவி.தினகரன்

பிரதமர் மோடி தலைமையில் மதுராந்தகம் அருகே வரும் 23-ம் தேதி தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கூட்டம் நடக்கிறது.

இதில் கூட்டணியில் இடம்பெறும் கட்சித் தலைவர்கள் பங்கேற்பார்கள் என்றும் கூட்டணியில் இடம்பெறுபவர்கள் யார் என்று அப்போது தெரியும் என்று பாஜக தலைவர்கள் கூறி வருகின்றனர்.

கூட்டத்தில் கலந்துகொள்ள வருகை தரும் பிரதமர் மோடியை வரவேற்று மதுராந்தகத்தில் வைக்கப்பட்ட பேனரில் அதிமுக – பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தலைவர்களின் படங்களோடு, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் படமும் இடம்பெற்றுள்ளது.

பேனரில் இடம்பெற்ற டிடிவி தினகரன்

இன்னமும் கூட்டணி முடிவை அறிவிக்காத டிடிவி தினகரன் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைவது உறுதி என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று (ஜன.17) சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த டிடிவி தினகரனிடம் கூட்டணி குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.

அதற்கு பதிலளித்த அவர், "தினகரன் தலைமறைவாகிவிட்டார் என்று எனக்கு எதிராகவும், ஆதரவாகவும் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

தயகத்தினால் வீட்டிலேயே இருக்கிறார். சோர்ந்து போய்விட்டார் என்றும் தகவலைப் பரப்புகிறார்கள். ஆனால் எனக்கு எந்தவித தயக்கமும் இல்லை. மனதில் எந்த கணமும் இல்லை.

 டிடிவி தினகரன்
டிடிவி தினகரன்

எந்தத் தொகுதியில் போட்டியிடுவேன் என்று நான் இன்னும் முடிவெடுக்கவில்லை. நாங்கள் கூட்டணிக்கு செல்வதை உரியவர்கள் அறிவிப்பார்கள்.

அதன்பிறகு உங்களுக்கு கூட்டணி குறித்து தெரிய வரும். நான் ஒரு கூட்டணியில் சேரும்போது அந்தக் கூட்டணிக்கு தலைமைத் தாங்குபவர்கள் கூட்டணி குறித்து அறிவிப்பார்கள்" என்று தெரிவித்திருக்கிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.