பொங்கலுக்கு பிறகு அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

புத்தாண்டின் தொடக்கத்திலிருந்தே தங்கத்தின் விலை யாரும் எதிர்பாராத வகையில் உச்சத்தை தொட்டு, நகை வாங்குவோரை திகைக்க செய்தது. கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாகத் தங்கம் விலை ஏறுமுகமாகவே இருந்து வந்த நிலையில், பொங்கல் திருநாளன்றும் விலை உயர்வு தொடர்ந்தது. அதன்படி, நேற்று 22 காரட் தங்கம் கிராமுக்கு 10 ரூபாய் அதிகரித்து 13,290 ரூபாய்க்கும், சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து 1,06,320 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

 

தொடர் விலையேற்றத்தால் கவலையில் இருந்த நகை பிரியர்களுக்கு இன்று ஒரு மகிழ்ச்சியான செய்தி கிடைத்துள்ளது. இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளதால் பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர். 

 

இன்றைய நிலவரப்படி, 22 காரட் தங்கம் கிராமுக்கு 60 ரூபாய் குறைந்து 13,230 ரூபாய்க்கும், சவரனுக்கு 480 ரூபாய் சரிந்து 1,05,840 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. அதேபோல், 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு 40 ரூபாய் குறைந்து 11,050 ரூபாயாகவும், சவரனுக்கு 320 ரூபாய் சரிந்து 88,400 ரூபாயாகவும் உள்ளது.

 

வெள்ளி இன்று ஒரு கிராம் வெள்ளி 4 ரூபாய் குறைந்து 306 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 4,000 ரூபாய் என்ற அளவில் பெருமளவு குறைந்து 3,06,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.  

 

Edited by Siva

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.