தங்கம் விலை உயர்வு.. வெள்ளி விலை சரிவு.. சென்னையில் இன்றைய நிலவரம்..!
சென்னையில் தங்கம் விலை இன்று அதிரடியாக அதிகரித்துள்ளது நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச சந்தையில் நிலவும் மாற்றங்கள் மற்றும் பொருளாதாரச் சூழல் காரணமாக, ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 அதிகரித்துள்ளது. இன்றைய நிலவரப்படி, ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.12,800-க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.1,02,400க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ஒரு லட்ச ரூபாயைக் கடந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், 24 காரட் சுத்த தங்கத்தின் விலையும் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் சுத்த தங்கம் ரூ.13,963-க்கும், 8 கிராம் ரூ.1,11,704-க்கும் விற்பனையாகிறது. தங்கம் விலை ஏறினாலும் வெள்ளியின் விலை இன்று சரிந்துள்ளது.
ஒரு கிராம் வெள்ளி ரூ.268-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,68,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. திருமண விசேஷங்கள் நெருங்கும் வேளையில், தங்கம் மற்றும் வெள்ளியின் இந்த விலை உயர்வு நடுத்தர குடும்பத்தினரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Mahendran
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

