தங்கம் விலை இன்று அதிரடியாக குறைவு.. சென்னையில் 1 சவரன் எவ்வளவு?
சென்னையில் கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கத்தின் விலை, இன்று அதிரடியாக குறைந்துள்ளது.
ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 400 குறைந்து, ஒரு சவரன் ரூ. 1,02,000 என்ற விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ. 12,750 ஆக உள்ளது. அதேபோல், தூய தங்கமான 24 காரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 13,909 என்றும், அதன் 8 கிராம் விலை ரூ. 1,11,272 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தங்கத்தை தொடர்ந்து வெள்ளியின் விலையிலும் இன்று மாற்றம் காணப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ. 272 ஆகவும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ. 2,72,000 என்ற அதீத உயர்விலும் வர்த்தகமாகிறது.
திருமண சீசன் மற்றும் பொங்கல் பண்டிகை நெருங்கும் வேளையில், தங்கத்தின் விலை சற்றே குறைந்துள்ளது நடுத்தரக் குடும்பத்தினருக்கு ஒரு சிறிய ஆறுதலை அளித்துள்ளது.
Edited by Mahendran
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

