மகளை வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய தந்தைக்கு தூக்கு தண்டணை - குற்றம் நிரூபிக்கப்பட்டது எப்படி?

நெல்லை மாவட்டம், வள்ளியூரைச் சேர்ந்த 43 வயதான மரம் வெட்டும் தொழிலாளி. இவருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவிக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். கருத்து வேறுபாட்டால் முதல் மனைவியைப் பிரிந்து இரண்டாவது மனைவியுடன் வாழ்ந்து வந்த தொழிலாளிக்கு 2 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். இதில், மூத்த மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது. இரண்டாவது மகளுக்கு 15 வயதாகிறது. இவர், 8-ம் வகுப்போடு பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்டார். தினமும் காலையில் அச்சிறுமியின் தாய், அருகிலுள்ள தோட்டத்திற்கு வேலைக்குச் சென்று விடுவார். இதனால் சிறுமி, சமைப்பது, துணி துவைப்பது உள்ளிட்ட வேலைகளைச் செய்வார். அவரது தந்தை மரம் வெட்டிவிட்டு மதியம் வீட்டிற்கு வந்து சாப்பிடுவது வழக்கம்.

நெல்லை நீதிமன்றம்

இந்த நிலையில், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 5-ம் தேதி சிறுமியின் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. அவரது தாயார் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்ப்பட்டார். அங்கு பரிசோதித்ததில் சிறுமி 5 மாத கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதுகுறித்து வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். கடந்த 2024-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 27-ம் தேதி சிறுமியின் தாயார் கோயிலுக்குச் சென்றிருந்த போது சிறுமியை தந்தையே பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்தது.

இந்த சம்பவத்தை வெளியே சொல்லக்கூடாது என தந்தை மிரட்டியதும், பல முறை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதும் தெரிய வந்தது. இதனையடுத்து சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். சிறுமியின் கருவில் உருவான சிசுவின் டி.என்.ஏ மாதிரியும், தந்தையின் டி.என்.ஏ மாதிரியும் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டது. 7 மாத ஆய்வுக்குப் பிறகு கடந்த அக்டோபர் 10-ம் தேதி வெளியான முடிவில் சிறுமியின் கர்பத்திற்கு தந்தைதான் காரணம் என்பது தெரிய வந்தது. நெல்லை சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு கடந்த 11 மாதங்களாக நடந்து வந்தது. இந்த நிலையில், நீதிபதி சுரேஷ்குமார் 66 பக்க தீர்ப்பினை வழங்கினார்.

நீதிமன்ற வளாகம்

”இந்த வழக்கில் நீதிமன்றம் குறைந்தபட்ச தண்டனை வழங்க நினைத்தாலும், மனைவியும் பாதிக்கப்பட்ட சிறுமியும் உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர். சொந்த மகளையே தந்தை வன்கொடுமை செய்தை ஏற்க முடியாது. அதனால், அவருக்கு உச்சபட்ச தண்டனையான தூக்கு தண்டனை வழங்கப்படுகிறது” என தீர்ப்பில் கூறியுள்ளார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.