காலையில் உயர்ந்த தங்கம் மாலையில் மீண்டும் உயர்வு.. இன்று ஒரே நாளில் ரூ.1,280 உயர்வு..!
தமிழகத்தில் இன்று ஆபரண தங்கத்தின் விலை யாரும் எதிர்பாராத விதமாக வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது.
இன்று ஒரே நாளில் மட்டும் சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.1,02,080 என்ற புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
இன்று காலை வர்த்தகம் தொடங்கியபோது சவரனுக்கு ரூ.640 உயர்ந்த நிலையில், மதியத்திற்கு மேல் மீண்டும் ரூ.640 என இரண்டு கட்டங்களாக இந்த விலை உயர்வு பதிவாகியுள்ளது. இதன் மூலம் ஒரு கிராம் தங்கம் ரூ.12,760-க்கு விற்பனையாகிறது.
புத்தாண்டின் தொடக்கத்திலேயே தங்கம் விலை ஒரு லட்சத்தை தாண்டி உயர்ந்து வருவது, நடுத்தர வர்க்க மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Siva
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

