தங்கத்தின் விலை புதிய உச்சம்.. ரூ.1,01,000 தாண்டியது.. வெள்ளியும் ஒரே நாளில் ரூ.8000 உயர்வு..!
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்து, சவரன் ஒரு லட்ச ரூபாயை கடந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
கடந்த சில நாட்களாகவே ஏறுமுகத்தில் இருந்த தங்கத்தின் விலை, இன்று சவரனுக்கு ரூ.640 கூடி ரூ.1,01,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.12,680-க்கு விற்பனையாகிறது.
தூய தங்கமான 24 கேரட் தங்கத்தின் விலையும் இன்று கணிசமாக உயர்ந்துள்ளது. இதன் 1 கிராம் விலை ரூ.13,833 ஆகவும், 8 கிராம் விலை ரூ.1,10,664 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தங்கத்தை தொடர்ந்து வெள்ளியின் விலையும் இன்று அதிரடி உயர்வைக் கண்டுள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.265-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,65,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த விலை ஏற்றத்தால் முதலீட்டு நோக்கில் தங்கம் வாங்குபவர்களுக்கு இது சாதகமாக இருந்தாலும், திருமண வைபவங்களுக்காக நகை வாங்குவோர் கிராம் கணக்கில் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
Edited by Mahendran
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

