வார ராசிபலன்

இந்த வார ராசிபலன் ஜனவரி 5 முதல் 11 வரை மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ராசிபலன் அதிர்ஷ்டக் குறிப்புகள் மற்றும் எளிய பரிகாரங்களுடன் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிட மாமணி கிருஷ்ணதுளசி.

மேஷராசி அன்பர்களே!

குடும்பத்தில் ஏற்பட்டிருந்த சலசலப்புகள் நீங்கி அமைதி உண்டாகும்.சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. தந்தையுடன் அனுசரணையாக நடந்துகொள்ளவும். கணவன் - மனைவிக்கிடையே சிறு சிறு பிரச்னைகள் தோன்றக்கூடும். ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. வெளியூர்ப்பயணங்களால் உடல் அசதியும் சோர்வும் உண்டாகும். உங்களைப் பற்றித் தவறான அபிப்பிராயம் கொண்டிருந்த உறவினர்கள் தங்கள் தவற்றை உணர்ந்து வலிய வந்து பேசுவார்கள்.

அலுவலகத்தில் சற்று இறுக்கமான சூழ்நிலையே காணப்படும். அதிகாரிகள் கண்டிப்பு காட்டி னாலும் பொறுமை காப்பது நல்லது. சக ஊழியர்கள் அனுசரணையாக இருப்பதுடன், பணிகளில் உதவி செய்வதும் ஆறுதல் தருவதாக இருக்கும்.

வியாபாரத்தின் காரணமாக சிலர் தொலைதூர பயணங்களை மேற்கொள்ள நேரும். பணியாளர்கள் நல்லமுறையில் ஒத்துழைப்பு தருவார்கள். சக வியாபாரிகளுடன் இணக்கமான சூழ்நிலை உண்டா கும். விற்பனை சுமாராகத்தான் இருக்கும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். ஆனால், சற்று பணிச்சுமை கூடுவதால் உடல் அசதி ஏற்படக்கூடும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் சில சலுகைகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நாள்கள்: 6,8

அதிர்ஷ்ட எண்கள்: 1,4

வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான்

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

ஊராகி நின்ற உலகே போற்றி ஓங்கி அழலாய் நிமிர்ந்தாய் போற்றி

பேராகி யெங்கும் பரந்தாய் போற்றி பெயராதென் சிந்தை புகுந்தாய் போற்றி

நீராவி யான நிழலே போற்றி நேர்வா ரொருவரையு மில்லாய் போற்றி

காராகி நின்ற முகிலே போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி

ரிஷப ராசி அன்பர்களே!

கணவன் – மனைவிக் கிடையே ஏற்பட்டிருந்த கருத்துவேறுபாடு மறைந்து அந்நியோன்யம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். இதுவரை ஏற்பட்டு வந்த மருத்துவச் செலவுகள் குறையும். மற்றவர்களுடன் பேசும் போது பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். பணவரவில் பிரச்னை எதுவும் இருக்காது. வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும். சிலருக்கு வெளியூர்களில் உள்ள பிரசித்தி பெற்ற ஆலயங்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படும்.

அலுவலகத்தில் திருப்திகரமான போக்கே காணப்படும். எதிர்பார்த்த சில சலுகைகள் கிடைக்கும். வேறு வேலைக்குச் செல்ல விரும்புபவர்கள் அதற்கான முயற்சிகளை இந்த வாரம் மேற்கொண்டால் சாதகமாக முடியும்.

வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். சிலர் வாடகை இடத்தில் இருந்து சொந்த இடத்துக்குக் கடையை மாற்ற விரும்பினால், அதற்கான முயற்சிகளில் ஈடுபடலாம். சாதகமாக முடியும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான வாரம் இது. வேலைக்குச் செல்லும் பெண்கள் அலுவலகத்தில் கூடுதல் வேலை செய்யவேண்டி இருக்கும். ஆனால், அதற்கேற்ற அங்கீ காரம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நாள்கள்: 8,10

அதிர்ஷ்ட எண்கள்: 1,7

வழிபடவேண்டிய தெய்வம்: வரதராஜ பெருமாள்

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

என் நெஞ்சமே யான் என் சென்னியான் தானவனை

வன்னெஞ்சம் கீண்ட மணிவண்ணன் - முன்னம் சேய்

ஊழியான் ஊழிபெயர்ந்தான் உலகேத்தும்

ஆழியான் அத்தியூரான்

மிதுன ராசி அன்பர்களே!

வருமானம் அதிகரிக்கும். ஒரு சிலருக்கு எதிர்பாராத பணவரவு கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டாகும். நீண்டநாளாக உங்களை வருத்திக்கொண்டிருந்த உடல் உபாதைகளிலிருந்து நிவார ணம் கிடைக்கும். வீண்செலவுகள் எதுவும் ஏற்படுவதற்கில்லை. பணியின் காரணமாகப் பிரிந்திருந்த கணவன் - மனைவி ஒன்று சேரும் சந்தர்ப்பம் கனிந்து வரும். மற்றவர்களுடன் மனஸ்தாபம் ஏற்படும் என்பதால் பேசும்போது பொறுமை தேவை. பிள்ளை அல்லது பெண்ணின் திருமணத்துக்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம்.

அலுவலகத்தில் சக பணியாளர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும். உங்கள் வேலைகளில் மட்டுமே கவனம் செலுத்தவேண்டியது முக்கியம். அதிகாரிகளிடம் பேசும்போது பொறுமை இழக்காமல் இருப்பது நல்லது.

வியாபாரத்தில் சற்று கூடுதலாக உழைக்கவேண்டி இருக்கும். பற்று வரவு சுமுகமாக நடக்கும். பணி யாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உங்கள் முயற்சிகளுக்கு சக வியாபாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு பிரச்னை இல்லாத வாரம். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு எதிர்பார்ப்புகள் ஓரளவு நிறைவேறும்.

அதிர்ஷ்ட நாள்கள்: 9,11

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5

வழிபடவேண்டிய தெய்வம்: முருகப்பெருமான்

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த

கோளென் செயுங்கொடுங் கூற்றென் செயுங்கும ரேசரிரு

தாளுஞ் சிலம்புஞ் சதங்கையும் தண்டையுஞ் சண்முகமுந்

தோளுங் கடம்பு மெனக்குமுன் னேவந்து தோன்றிடினே

கடகராசி அன்பர்களே!

பொருளாதாரம் திருப்திகரமாக இருக்கும். அநாவசிய செலவுகள் எதுவும் இருக்காது. உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கவனம் தேவை. பணியின் காரணமாக வெளியூர்ப் பயணம் செல்ல நேரும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். தந்தை யுடன் ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கும். தந்தையிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பழைய கடன்கள் விஷயத்தில் சற்று எச்சரிக்கையாக இருப்பது நல்லது. பிள்ளைகளால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்றாலும் பாதிப்பு இருக்காது.

அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கவனமாக இருக்கவேண்டியது மிகவும் அவசியம். ஒரு சிலருக்கு இருக்கும் இடத்தில் இருந்து வேறு ஊருக்கு மாறுதல் கிடைக்கும். சக பணியாளர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும்.

வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சக வியாபாரிகளுடன் இருந்த கருத்துவேறுபாடுகள் நீங்கி சுமுகமான போக்கு ஏற்படும். வாடிக்கையாளர்களிடம் பாக்கிகளை வசூலிப்பதில் கனிவான அணுகுமுறை அவசியம்.

குடும்பநிர்வாகத்தை கவனிக்கும் பெண்களுக்கு பொறுப்புகள் கூடும் என்பதால் உடல் ஆரோக் கியத்தில் கவனம் தேவை. அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சக பணியாளர்களை அனுச ரித்து நடந்துகொள்ளவும்.

அதிர்ஷ்ட நாள்கள்: 6,11

அதிர்ஷ்ட எண்கள்: 5,9

வழிபடவேண்டிய தெய்வம்: அபிராமி அம்பிகை

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

உதிக்கின்ற செங்கதிர், உச்சித் திலகம், உணர்வுடையோர்

மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம்போது, மலர்க்கமலை

துதிக்கின்ற மின் கொடி, மென் கடிக் குங்கும தோயம்-என்ன

விதிக்கின்ற மேனி அபிராமி, எந்தன் விழுத் துணையே

சிம்ம ராசி அன்பர்களே!

பணவரவு திருப்திகரமாக இருக்கும். பிள்ளைகள் மூலம் பணவரவுக்கும் பொருள் சேர்க்கைக்கும் வாய்ப்பு உண்டாகும். பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறி, உங்கள் விருப்பப்படி நடந்துகொள்வார்கள். சிலருக்கு குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். சகோதர வகையில் சில பிரச்னைகள் ஏற்படும் என்றாலும் பாதிப்பு இருக்காது. நீண்டநாள்களாகச் சந்திக்காமல் இருந்த நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். அரசாங்கக் காரியங் கள் இழுபறியாகி முடியும்.

அலுவலகத்தில் உங்களின் பணித்திறன் மேம்படும். அதிகாரிகள் அனுசரணையாக இருப்பார்கள். எதிர் பார்த்த சலுகைகள் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. சிலருக்குப் பணியின் காரணமாக வெளி யூர்ப் பயணமும் அதனால் ஆதாயமும் கிடைக்கும்.

வியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிடவும் லாபம் கூடுதலாகக் கிடைக்கும்.பணியாளர்கள் நல்லமுறையில் பணி செய்வார்கள். பங்குதாரர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சக வியாபாரிகள் அனுசரணையாக இருப்பார்கள்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு சற்று பொறுப்புகள் கூடுவதால் மனதில் சோர்வும் அமைதிக் குறைவும் உண்டாகும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகச் சூழ்நிலை திருப்தி தருவ தாக இருக்கும்.

அதிர்ஷ்ட நாள்கள்: 7,9

அதிர்ஷ்ட எண்கள்: 1,5

வழிபடவேண்டிய தெய்வம்: பார்த்தசாரதி பெருமாள்

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

திரிந்துழலுஞ் சிந்தைதனைச் செவ்வே நிறுத்திப்

புரிந்து பகர்மின்? புகன்றால் - மருந்தாம்

கருவல்லிக் கேணியாம் அக்கதிக்குக் கண்ணன்

திருவல்லிக் கேணியான் சீர்

கன்னிராசி அன்பர்களே!

எதிர்பார்த்ததைவிடவும் வருமானம் கூடுதலாகவே இருக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். அவ்வப்போது சிறு சிறு பிரச்னைகள் ஏற்பட்டு மனதில் லேசான சோர்வை உண்டாக்கும். வழக்குகளில் உங்களுக்குச் சாதகமான போக்கு ஏற்படும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். தாயாரின் உடல் ஆரோக்கியத்துக்காக செலவு செய்ய நேரிடும். அரசாங்க வகையில் சிறுசிறு பிரச்னைகள் ஏற்பட்டாலும் பெரிய அளவில் பாதிப்பு எதுவும் இருக் காது. பிள்ளைகளால் செலவுகள் ஏற்படும்.

அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. சக பணியாளர்களிடம் எச்சரிக்கை யாக இருப்பதன் மூலம் தேவையற்ற பிரச்னைகளைத் தவிர்த்துவிடலாம். சிலருக்கு வேறு ஊருக்கு மாறு தல் கிடைக்கும். அதனால் நன்மையே ஏற்படும்.

வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகமாக வரும் என்றாலும் அதற்காக கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்த பங்குதாரர்கள் உதவி செய்வார்கள். பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும்..

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மனதுக்கு நிம்மதி உண்டாகும். கணவரின் அன்பும் ஆதர வும் மகிழ்ச்சி தரும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் பணிச்சுமை அதி கரிக்கும்.

அதிர்ஷ்ட நாள்கள்: 9,11

அதிர்ஷ்ட எண்கள்: 1,6

வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான்

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

வடிவேறு திரிசூலந் தோன்றுந் தோன்றும் வளர்சடைமேல் இளமதியந் தோன்றுந் தோன்றும்

கடியேறு கமழ்கொன்றைக் கண்ணி தோன்றும் காதில்வெண் குழைதோடு கலந்து தோன்றும்

இடியேறு களிற்றுரிவைப் போர்வை தோன்றும் எழில்திகழும் திருமுடியும் இலங்கித் தோன்றும்

பொடியேறு திருமேனி பொலிந்து தோன்றும் பொழில்திகழும் பூவணத்தெம் புனிதனார்க்கே

துலாம் ராசி அன்பர்களே!

குடும்பத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியும் காணப்படும். பொருளாதார வசதிக்கு குறைவு எதுவும் இருக்காது. புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். உடல்நலம் சீராகும். கணவன் - மனைவிக்கிடையே கருத்துவேறுபாடுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. முக்கியமான முடிவு எடுப்பதாக இருந்தால் குடும்பப் பெரியவர் களின் ஆலோசனையைக் கேட்டு எடுப்பது நல்லது. இளைய சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.

புதிய வேலைக்கு முயற்சி செய்துகொண்டு இருப்பவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு அலுவலகச் சூழ்நிலை மகிழ்ச்சி தரும். சில சலுகைகள் கிடைப்ப தற்கும் வாய்ப்பு உண்டு.

வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவுக்கு லாபம் கிடைக்காது. போட்டிகளைச் சமாளிக்க கடுமையாகப் பாடுபடவேண்டி இருக்கும். புதிய முயற்சிகள் எதுவும் இப்போது வேண்டாம். கடன் வாங்கி முதலீடு செய்வதைத் தவிர்க்கவும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான வாரம் இது. அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு பதவிஉயர்வும் ஊதியஉயர்வும் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நாள்கள்: 5,8

அதிர்ஷ்ட எண்கள்: 7, 9

வழிபடவேண்டிய தெய்வம்: ரங்கநாத பெருமாள்

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

பச்சைமா மலைபோல்மேனி பவளவாய் கமலச் செங்கண்

அச்சுதா அமர ரேறே ஆயர்தம் கொழுந்தே என்னும்

இச்சுவை தவிர யான்போய் இந்திர லோக மாளும்

அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே

விருச்சிகராசி அன்பர்களே!

பொருளாதார வசதிக்கு குறைவில்லை. செலவுகள் ஏற்பட்டாலும் சமாளித்து விடுவீர்கள். நெருங்கிய உறவினர்களிடம் பக்குவமாக நடந்துகொள்ளவும். அதனால், தேவையற்ற பிரச்னைகளைத் தவிர்த்துவிடலாம். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். திருமண வயதில் இருப்பவர்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் நிச்சயமாகும். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலையே காணப்படும். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அரசுக் காரியங்கள் இழுபறியாகும்.

அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். இருக்கும் வேலையில் இருந்து வ

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.