மீண்டும் தலைகீழாக குறைந்தது தங்கம் விலை.. ஒரு சவரன் ஒரு லட்சத்திற்கும் கீழ்..!
சென்னையில் கடந்த ஒரு வாரமாக வரலாறு காணாத உச்சத்தை தொட்டு, சாமானிய மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வந்த தங்கத்தின் விலை, இன்று அதிரடியாக குறைந்துள்ளது.
இன்று மாலை நிலவரப்படி, ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 560 சரிந்து, ஒரு சவரன் ரூ. 99,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று காலையில் ஏற்கனவே ரூ. 400 குறைந்திருந்த நிலையில், மாலையிலும் விலை சரிந்ததால் ஒட்டுமொத்தமாக ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 960 வரை விலை வீழ்ச்சியடைந்துள்ளது.
தற்போது ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ. 70 குறைந்து, ரூ. 12,480-க்கு விற்பனையாகிறது. கடந்த சில நாட்களாக ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்தைத் தாண்டி விற்பனையாகி வந்த நிலையில், ஆண்டின் இறுதி நாளில் மீண்டும் ஒரு லட்சத்திற்கும் கீழ் குறைந்திருப்பது நகை வாங்குவோரிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
தங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையும் இன்று சரிவை சந்தித்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ. 1 குறைந்து ரூ. 257-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 1,000 குறைந்து ரூ. 2,57,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Edited by Mahendran
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

