10 நாட்கள் தங்கம் விலையில் மாற்றமே இல்லை.. எதிர்காலத்தில் ஏறுமா? இறங்குமா?

கடந்த பத்து நாட்களில் சென்னையில் தங்கம் விலை பெரிய அளவில் ஏற்றமோ, இறக்கமோ இல்லாமல் கிட்டத்தட்ட ஒரே விலையில் விற்பனை ஆகி வருகிறது. நவம்பர் 30-ஆம் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.11,980 என்ற விலையில் விற்பனை ஆனது. இந்த நிலையில், இன்று தன் விலை ரூ.12,000 என்று விற்பனையாகி வருகிறது.

 

இதன் மூலம், கடந்த 10 நாட்களில் தங்கத்தின் விலையில் ஒரு கிராமுக்கு வெறும் ரூ.20 மட்டுமே உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், வெள்ளி விலையிலும் பெரிய அளவில் ஏற்றமோ, இறக்கமோ இல்லாமல் நிலைத்தன்மை காணப்படுகிறது.

 

இந்த நிலையில், சென்னையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த முழுமையான நிலவரத்தை விரிவாகப் பார்ப்போம்.

 

சென்னையில் நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 12,040

சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 12,000

 

சென்னையில் நேற்று ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை: ரூ. 96,320

சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 96,000

 

சென்னையில் நேற்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 13,134

சென்னையில் இன்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 13,091

 

சென்னையில் நேற்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 105,072

சென்னையில் இன்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ.  104,728

 

சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி விலை: 199.00

சென்னையில் இன்று ஒரு கிலோ வெள்ளி விலை: 1,99,000.00

 

Edited by Siva

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.