கடந்த 10 நாட்களில் வெறும் 10 ரூபாய் மட்டுமே உயர்ந்த தங்கம் விலை.. ஏறுமா? இறங்குமா?

கடந்த சில நாட்களாகவே தங்கம் விலையில் பெரிய அளவில் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையான போக்கு காணப்பட்டது. அந்த வகையில், டிசம்பர் 2 ஆம் தேதி ஒரு கிராம் தங்கம் 12,040 ரூபாய் என இருந்த நிலையில், இன்று அதாவது டிசம்பர் 11ல் ஒரு கிராம் தங்கம் 12,050 ரூபாய்ஆக உள்ளது.

 

கடந்த 10 நாட்களில் தங்கம் விலை வெறும் ரூ.10 மட்டுமே உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

தங்கம் விலையில் மிதமான ஏற்ற இறக்கம் காணப்பட்டாலும், வெள்ளி விலை உச்சத்திற்கு சென்று வருகிறது. நேற்றைய விலையில் இருந்து இன்று ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.2,000 உயர்ந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

 

இந்த நிலையில், இன்று சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை விரிவாகப் பார்க்கலாம்.

 

சென்னையில் நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 12,030

சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 12,050

 

சென்னையில் நேற்று ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை: ரூ. 96,240

சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 96,400

 

சென்னையில் நேற்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 13,123

சென்னையில் இன்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 13,145

 

சென்னையில் நேற்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 104,984

சென்னையில் இன்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ.  105,160

 

சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி விலை: 209.00

சென்னையில் இன்று ஒரு கிலோ வெள்ளி விலை: 209,000.00

 

Edited by Siva

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.