மாலையில் மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை.. 1 சவரன் 1 லட்சத்தை தாண்டியதால் பரபரப்பு..!
தமிழகத்தில் தங்கத்தின் விலை இன்று ஒரு சவரன் ரூ.1,00,120 என்ற புதிய வரலாற்று உச்சத்தைத் தொட்டு, முதன்முறையாக ரூ.1 லட்சத்தை தாண்டியது. இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,160 விலை உயர்ந்துள்ளது.
சர்வதேச முதலீட்டாளர்கள் தங்கத்தில் அதிகளவில் முதலீடு செய்வதால், உலக சந்தையில் விலை உயர்ந்து, உள்நாட்டிலும் அதன் தாக்கம் நீடிக்கிறது. கடந்த அக்டோபரில் ரூ.95,000-ஐ எட்டிய தங்கம், தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
டிசம்பர் 12 அன்று ரூ.98,960-க்கு விற்பனையான தங்கம், இன்று மதியம் ரூ.1,00,120-ஐ தொட்டது. தற்போது ஒரு கிராம் தங்கம் ரூ.12,515-க்கு விற்பனையாகிறது.
வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.5 அதிகரித்து ரூ.215-க்கு விற்பனையாகிறது.
Edited by Siva
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

