பங்குச்சந்தை இன்று 2வது நாளாக திடீர் சரிவு.. இன்றைய நிப்டி நிலவரம் என்ன?
கடந்த சில நாட்களாக இந்திய பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்தது. நேற்று காலை பங்குச்சந்தை மிக மோசமாக சரிந்தாலும், மதியத்திற்கு மேல் ஓரளவு உயர்ந்து முதலீட்டாளர்களுக்கு நிம்மதியை அளித்தது. ஆனால், இன்று மீண்டும் பங்குச்சந்தை சரிந்துள்ளது.
மும்பை பங்குச்சந்தை(சென்செக்ஸ் 365 புள்ளிகள் சரிந்து 84,842 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல், தேசியப் பங்குச்சந்தை நிஃப்டி 106 புள்ளிகள் சரிந்து 25,921 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
இன்றைய பங்குச்சந்தையில் அப்பலோ ஹாஸ்பிடல், ஆசியன் பெயிண்ட், பாரதி ஏர்டெல், இண்டிகோ, நெஸ்லே இந்தியா, ஸ்டேட் வங்கி, டாடா கன்ஸ்யூமர், டைட்டன் உள்ளிட்ட பங்குகளின் விலைகள் உயர்ந்து வர்த்தகமாகி வருகிறது.
ஆனால், ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் ஃபைனான்ஸ், சிப்லா, டாக்டர் ரெட்டி, ஹெச்.சி.எல் டெக்னாலஜிஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி, ஹிந்துஸ்தான் லீவர், ஐசிஐசிஐ வங்கி, ஐடிசி, இன்ஃபோசிஸ், சன் பார்மா, டிசிஎஸ், டெக் மகேந்திரா உள்ளிட்ட பங்குகளின் விலை குறைந்து வர்த்தகமாகி வருகிறது.
Edited by Siva
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

