வெள்ளி விலை வரலாறு காணாத உயர்வு.. இன்று ஒரே நாளில் ரூ.11,000 உயர்ந்ததால் அதிர்ச்சி..!
சென்னையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் அதிரடியாக உயர்ந்து புதிய வரலாற்று உச்சத்தை தொட்டுள்ளன. குறிப்பாக, வெள்ளி விலை ஒரே நாளில் கிலோவுக்கு ரூ. 11,000 உயர்ந்து, ஒரு கிலோ ரூ. 2,22,000 என்ற வரலாறு காணாத நிலையை எட்டியுள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ. 222-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஆபரணத் தங்கத்தை பொறுத்தவரை, சவரனுக்கு ரூ. 400 அதிகரித்து, ஒரு சவரன் ரூ. 99,200-க்கும், ஒரு கிராம் ரூ. 12,400-க்கும் விற்பனையாகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்புதான் தங்கம் விலை சவரன் ஒரு லட்சம் ரூபாயை தாண்டியது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் மற்றும் உலக நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கத்தை சேமித்து வருவது இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணமாகும்.
வெள்ளி விலை உயர்வுக்கு, ஆபரண தேவையை தாண்டி தொழில்துறை ரீதியான தேவைகளே முக்கிய காரணமாக பார்க்கப்படுகின்றன. குறிப்பாக, மின்சார வாகனத் தயாரிப்பு , 5ஜி உள்கட்டமைப்பு, செமிகண்டக்டர் மற்றும் பசுமை எரிசக்தி தொழில்நுட்பங்களில் வெள்ளியின் பயன்பாடு அதிகரித்துள்ளதால், அதன் மதிப்பு சர்வதேச சந்தையில் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
Edited by Mahendran
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

