மீண்டும் ரூ.1 லட்சத்தை தாண்டிய தங்கம் விலை.. வெள்ளி விலையும் உச்சம்..!

 

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை மீண்டும் ஒரு சவரன் ஒரு லட்ச ரூபாயை தாண்டி வரலாற்று உச்சத்தை தொட்டுள்ளது. 

 

இன்று ஒரே நாளில் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது நகை வாங்குவோரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

இன்று காலை நிலவரப்படி, 22 காரட் தங்கம் சவரனுக்கு ரூ. 640 உயர்ந்த நிலையில், பிற்பகலில் மேலும் ரூ. 720 அதிகரித்து, ஒரு சவரன் ரூ. 1,00,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று ஒரே நாளில் மட்டும் சவரனுக்கு மொத்தம் ரூ. 1,360 உயர்ந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் தற்போது ரூ. 12,570-ஆக உள்ளது.

 

அதேபோல், வெள்ளி விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ. 231க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ. 2,31,000-க்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்கள் மற்றும் முதலீட்டாளர்களின் ஆர்வம் காரணமாக தங்கத்தின் விலை மீண்டும் ஒரு லட்சத்தை எட்டியுள்ளது நடுத்தர மக்களைப் பெரும் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

Edited by Mahendran

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.